பிரதமர் அலுவலகம்
உலக வானொலி தினத்தை முன்னிட்டு வானொலி நேயர்களுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
13 FEB 2021 10:00AM by PIB Chennai
உலக வானொலி தினத்தை முன்னிட்டு அனைத்து வானொலி நேயர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டிருப்பதுடன், சமூக இணைப்பை ஆழப்படுத்தும் அருமையான ஊடகமாக வானொலி திகழ்கிறது என்று கூறியுள்ளார்.
இதுதொடர்பான சுட்டுரை செய்தியில், “ இனிய உலக வானொலி தின வாழ்த்துகள்! அனைத்து வானொலி நேயர்களுக்கும் வாழ்த்துகள், புதுமையான படைப்புகள் மற்றும் இசையால் வானொலியை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அனைவருக்கும் வாழ்த்துகள். இது, சமூக இணைப்பை ஆழப்படுத்துவதற்கான ஓர் அருமையான ஊடகமாகும். தனிப்பட்ட முறையில், மனதின் குரல் நிகழ்ச்சியின் வாயிலாக வானொலியின் நேர்மறையான தாக்கத்தை நான் உணர்கிறேன்”, என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
-------
(வெளியீட்டு அடையாள எண்: 1697706)
வருகையாளர் எண்ணிக்கை : 218
இந்த வெளியீட்டை படிக்க:
Malayalam
,
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada