சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவின் தினசரி கொவிட் பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது: 62.6 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

Posted On: 09 FEB 2021 11:09AM by PIB Chennai

நாட்டின் தினசரி கொவிட் பாதிப்பு தொடர்ந்து பலமடங்கு குறைந்து வருகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் 9,110 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 1.43 லட்சமாக (1,43,625)  குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை இந்தியாவின் மொத்த பாதிப்பில் 1.32 சதவீதம்.

இதுவரை மொத்தம் 1.05 (1,05,48,521)   கோடி பேர் குண மடைந்துள்ளனர்.  கடந்த 24 மணி நேரத்தில் 14,016 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குணமடைந்தோர் வீதம் 97.25 சதவீதமாக உள்ளது. இங்கிலாந்து, அமெரிக்கா, இத்தாலி, ரஷ்யா, பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குணமடைந்தோர் வீதம் இந்தியாவை விட குறைவாக உள்ளது.

இந்தியாவின் தினசரி கொவிட் உயிரிழப்பும் வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஜனவரி  2வது வாரத்தில் 211 ஆக இருந்த தினசரி சராசரி உயிரிழப்பு, பிப்ரவரி 2வது வாரத்தில் 96 ஆகக் குறைந்துள்ளது. இது 55 சதவீதம் குறைவு. இந்தியாவின் கொவிட் உயிரிழப்பு வீதம் 1.43 சதவீதமாக உள்ளது. உலக சராசரி 2.18 சதவீதமாக உள்ளது.

பிப்ரவரி 9ம் தேதி காலை 8 மணி வரை, 62.6 லட்சம் பேருக்கு (62,59,008) கொவிட்-19 தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் 54,82,102 பேர் சுகாதாரப் பணியாளர்கள், 7,76,906 பேர் முன்களப் பணியாளர்கள்.

கடந்த 24 மணி நேரத்தில் 78 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 4 நாட்களாக உயிரிழப்பு எண்ணிக்கை 100க்கும் குறைவாக உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1696402

*****************



(Release ID: 1696499) Visitor Counter : 200