பிரதமர் அலுவலகம்
ஒத்துழைப்புக்கான அருமையான தளம் ஏரோ இந்தியா: பிரதமர்
प्रविष्टि तिथि:
03 FEB 2021 12:01PM by PIB Chennai
பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது எனவும் இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு ஏரோ இந்தியா அருமையான தளமாக உள்ளது என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்தியில், ‘‘பாதுகாப்பு மற்றும் விண்வெளித்துறையில் இந்தியா அளவற்ற ஆற்றலை வழங்குகிறது. இத்துறைகளின் ஒத்துழைப்புக்கு, ஏரோ இந்தியா அருமையான தளம். இத்துறைகளில் எதிர்காலத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இது தற்சார்பு இந்தியாவாக மாறும் நமது தேடலுக்கு உத்வேகம் அளிக்கும்’’ என குறிப்பிட்டுள்ளார்.
***
(रिलीज़ आईडी: 1694740)
आगंतुक पटल : 218
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam