நிதி அமைச்சகம்
காப்பீட்டுத்துறையில் எஃப் டிஐ வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது பாதுகாப்புடன் கூடிய வெளிநாட்டினர் உரிமை மற்றும் கட்டுப்பாட்டுக்கு அனுமதி
Posted On:
01 FEB 2021 1:59PM by PIB Chennai
நாடாளுமன்றத்தில் 2021-22ஆம் ஆண்டுக்கான மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்த நிதியமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், காப்பீட்டுத் துறையில், அந்நிய முதலீட்டு வரம்பை 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக அதிகரிக்கும் வகையில் காப்பீட்டுச் சட்டம் 1938-ல் திருத்தம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். புதிய உத்தேச வரையறையின்படி, நிறுவன வாரியத்தின் பெரும்பாலான இயக்குநர்கள் மற்றும் முக்கிய மேலாண்மை நிர்வாகிகள் இந்தியர்களாக இருப்பார்கள். ஒரு குறிப்பிட்ட அளவிலான லாபம் பொது இருப்பாக வைக்கப்படும்.
பொதுத்துறை வங்கிகளின் நிதித் திறனை ஒருங்கிணைக்கும் வகையில், 2021-22ஆம் நிதியாண்டில் ரூ.20,000 கோடி அளவுக்கு மறு முதலீடு செய்ய அரசு உத்தேசித்துள்ளது.
சிறிய அளவில் கடன் பெறுவோரின் நலனைப் பாதுகாக்க கடன் ஒழுங்குமுறை மேம்படுத்தப்படும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களின் குறைந்தபட்ச சொத்து மதிப்பு ரூ.100 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 2002 ஆம் ஆண்டின் சர்ஃபாசி சட்டத்தின் கீழ் கடன் மீட்பு அளவு ரூ.50 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது என அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693902
(Release ID: 1694078)
Visitor Counter : 298