நிதி அமைச்சகம்

தேசிய கட்டமைப்பு மூலமான திட்டங்களுக்கு நிதி அதிகரிப்பு

Posted On: 01 FEB 2021 1:45PM by PIB Chennai

நாடாளுமன்றத்தில் 2021-22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சமர்ப்பித்த நிதி & கார்ப்பரேட் விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், தேசிய கட்டமைப்பு மூலமான திட்டங்களின் இலக்கை வரும் ஆண்டுகளில் எட்டுவதற்கு பின்வரும் மூன்று நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசு உத்தேசித்துள்ளதாக அறிவித்தார்:

  1. நிதிசார் கட்டமைப்புகளை உருவாக்குதல்
  2. சொத்துகளை பணமாக்குவதற்கு அதிக முக்கியத்துவம் அளித்தல்
  3. மத்திய மற்றும் மாநில பட்ஜெட்களில் மூலதன செலவினத்துக்கான பங்கை அதிகரித்தல்

     2019 டிசம்பரில் 6835 திட்டங்களுடன் தொடங்கப்பட்ட தேசியக் கட்டமைப்புத் திட்டம்  இப்போது 7,400 திட்டங்களுக்கு  விரிவுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், சில முக்கிய கட்டமைப்பு அமைச்சகங்கள் மூலம் ரூ.1.10 லட்சம் கோடி மதிப்பில் சுமார் 217 திட்டங்கள் முடிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 

கட்டமைப்பு நிதியளித்தல் - மேம்பாட்டு நிதி நிறுவனம் (டி.எப்.ஐ.)

மேம்பாட்டு நிதி நிறுவனத்துக்கு முதலீடு அளிக்கும் வகையில் மத்திய பட்ஜெட்டில் ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படுவதாக மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். டி.எப்.ஐ. உருவாக்குவதற்கு ஒரு மசோதா கொண்டு வரப்படும் என்றும், இந்த நிறுவனம் கட்டமைப்பு நிதி வசதியில் சேவை அளிக்கும், வசதிகளை அளிக்கும், தூண்டுதலை ஏற்படுத்தும் அமைப்பாக செயல்படும் என்றும் அவர் தெரிவித்தார். மூன்றாண்டு காலத்தில் இந்த நிறுவனம் குறைந்தபட்சம் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு கடன் வழங்க வேண்டும் என்பது நோக்கமாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சொத்து ரொக்கமாக்குதல்

``தேசிய ரொக்கமாக்குதல் வழிமுறை'' தொடங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் அறிவித்தார். செயல்பட முடியாத நெருக்கடியில் உள்ள கட்டமைப்பு சொத்துகள் இதில் ரொக்கமாக்கப்படும். புதிய கட்டமைப்பு வசதி உருவாக்கத்துக்கு, பொதுத் துறை கட்டமைப்பு சொத்துகளை பணமாக்குதல் மிக முக்கியமானதாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  இத் திட்டத்தின் முன்னேற்றம் பற்றியும், இதன் விவரங்கள் பற்றியும் முதலீட்டாளர்களுக்குத் தகவல்களை அளிக்கும் வகையில், சொத்துகளைப் பணமாக மாற்றும் அறிவிப்பு பட்டியல் உருவாக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். பணமாக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் சில முக்கிய நடவடிக்கைகள் பின்வரும் வகையில் இருக்கும்:

  1. சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் ஒரு InvIT உருவாக்க தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், PGCIL-ம் தனித்தனியே முன்மொழிவு அளித்துள்ளன. நிறுவன மதிப்பு ரூ.5,000 மதிப்புள்ள, செயல்பாட்டில் உள்ள சாலைகள் NHAIInvIT -யிடம் ஒப்படைக்கப் படுகின்றன. அதேபோல, ரூ.7,000 கோடி மதிப்பிலான சொத்துகள் PGCILInvIT-யிடம் ஒப்படைக்கப்படும்.
  2. பிரத்யேக சரக்கு வழித்தட சொத்துகளை, சேவை தொடங்கியதும் அதை ரயில்வே நிர்வாகம் பணமாக்கிக் கொள்ளும்
  3.  செயல்பாடு மற்றும் மேலாண்மை சலுகைகளுக்கு அடுத்தகட்டமாக சில விமான நிலையங்களின் வசதிகள் பணமாக்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693892



(Release ID: 1694024) Visitor Counter : 267