நிதி அமைச்சகம்

மூலதன செலவுக்கான ரூ.1,07,100 கோடி உட்பட ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி நிதி ஒதுக்கீடு

Posted On: 01 FEB 2021 1:49PM by PIB Chennai

மூலதன செலவுக்கான ரூ.1,07,100 கோடி உட்பட ரயில்வே துறைக்கு ரூ.1,10,055 கோடி நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாக நிதியமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். 2021-22 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து பேசிய அவர், இந்திய ரயில்வே ‘இந்தியாவுக்கான தேசிய ரயில்வே திட்டம்- 2030’-ஐ தயாரித்து வருவதாக தெரிவித்த அமைச்சர், இந்த புதிய திட்டம் 2030 ஆம் ஆண்டுக்குள் ரயில்வே நடைமுறைக்கு தேவையான எதிர்கால தேவைகளை நிரப்பும் என்றார்.

மேலும் சரக்கு போக்குவரத்துக்கான செலவை குறைத்திருப்பதாகவும் இது இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) திட்டத்தை செயல்படுத்துவதற்கான முக்கிய யுக்தியாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். அதோடு சில அறிவிப்புகளையும் அமைச்சர் வெளியிட்டார்.

அதன் விவரம் வருமாறு-

1. காரக்பூர்-விஜயவாடா இடையேயான கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை, புசாவல்-காரக்பூர்-தன்குனி இடையேயான கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை, இட்டார்சி-விஜயவாடா இடையேயான வட-தென் நெடுஞ்சாலை திட்டங்கள் அமைக்கப்பட இருப்பதாகவும், முதற்கட்டமாக இதற்கான முழு திட்ட அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.

2. ப்ராட்கேஜ் எனப்படும் அகல ரயில் பாதைகள் அனைத்தும் வரும் 2023 ஆம் ஆண்டு டிசம்பருக்குள் முழுமையாக மின்மயமாக்கப்படும். 2021 ஆம் ஆண்டு இறுதிக்குள் 46,000 ரயில் கிலோ மீட்டர் தொலைவுக்கு அதாவது 72 சதவீத மின்மயமாக்கப் பணிகள் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், 2020 அக்டோபர் 1-ந் தேதி முதல் 41,548 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து இந்தப் பணிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பயணிகள் பாதுகாப்பு மற்றும் வசதி:

1. சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையிலும், அவர்களுக்கு சிறப்பான பயணம் மற்றும் அனுபவங்களை வழங்கும் வகையிலும் அழகிய வடிவமைப்புகளைக் கொண்ட எல்எச்பி (LHB) ரயில் பெட்டிகளை சுற்றுலாத் தல வழித்தடங்களில் செல்லும் ரயில்களில் அறிமுகம் செய்யப்படும்.

2. மனித தவறுகளால் ஏற்படும் ரயில் விபத்துகளை தடுக்கும் வகையில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் பாதுகாப்புகளை கொண்ட தானியங்கி ரயில் பாதுகாப்பு முறை செயல்படுத்தப்படும் என்றும் அமைச்சர் திருமதி. நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693895


(Release ID: 1693981) Visitor Counter : 279