சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை வெறும் 1.68 லட்சமாக குறைந்துள்ளது

Posted On: 31 JAN 2021 12:25PM by PIB Chennai

இந்தியாவில் தற்போது கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  1.68 லட்சமாக (1,68,784) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் 1.57 சதவீதம் மட்டுமே ஆகும்.

31 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5000-க்கும் குறைவானோர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகிறார்கள். அந்தமான் நிக்கோபாரில் 4 பேரும், டாமன் டையூ, தாத்ரா நாகர் ஹவேலியில் தலா 6 பேரும் தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

79.69 சதவீத பாதிப்புகள் 5 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் ஏற்பட்டுள்ளன. நாட்டின் மொத்த பாதிப்பில் பெரும்பாலானவை (69.41%) கேரளா, மகாராஷ்டிராவில் பதிவாகியுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் 13,052 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 13,965 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று (ஜனவரி 31, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 1,05,821 பேர் உட்பட, நாடு முழுவதும் 37.44 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு (37,44,334) கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 5,275 முகாம்களில் 2,44,307 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 68,962 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

 

உலகளவில் தடுப்பூசியை செலுத்தும் நாடுகளில் இந்தியா ஐந்தாவது இடத்தில் உள்ளது. பெரும்பாலான நாடுகள் இந்தியாவிற்கு முன்னரே தடுப்பூசியை வழங்கிய போதிலும் நம் நாடு இந்த சாதனையைப் படைத்துள்ளது.

தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் 63.34 சதவீதத்தினர் 8 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 7,032 பேரும், மகாராஷ்டிராவில் 1,535 பேரும், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 547 பேரும் ஒரே நாளில் புதிதாக தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நேற்று கேரளாவில் 6,282 பேரும், மகாராஷ்டிராவில் 2,630 பேரும்தமிழகத்தில் 505 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 127 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1693680

*************************


(Release ID: 1693694) Visitor Counter : 218