சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கொரோனாவால் அன்றாட உயிரிழப்புகள் : 8 மாதங்களுக்குப் பிறகு 131 ஆகக் குறைவு
Posted On:
25 JAN 2021 10:54AM by PIB Chennai
- இந்தியாவில், கொரோனா நோய் தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.84 இலட்சமாகக் (1,84,182) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.73 சதவீதமாகும்.
• பெரும்பாலான பாதிப்புகள் இரண்டு மாநிலங்களில் மட்டுமே பதிவாகியுள்ளன. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் 64.71 சதவீதத்தினர் கேரளா, மகாராஷ்டிராவை மட்டுமே சேர்ந்தவர்கள்.
• கேரளாவில் 39.7 சதவீதத்தினரும், மகாராஷ்டிராவில் 25 சதவீதத்தினரும் சிகிச்சை பெறுகின்றனர்.
• கடந்த 24 மணி நேரத்தில் தற்போதைய மொத்த பாதிப்பில் 226 குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 13,203 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 13,298 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
• கடந்த 24 மணிநேரத்தில் 131 உயிரிழப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன. இது கடந்த எட்டு மாதங்களில் மிகவும் குறைவான எண்ணிக்கையாகும்.
• இந்தியாவில் இன்றுவரை மொத்தம் 19,23,37,117 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
• இன்று (ஜனவரி 25, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 61,720 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 16,15,504 பேருக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
• கடந்த 24 மணி நேரத்தில் 694 அமர்வுகளில் 33,303 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 28,614 அமர்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
• 1.03 கோடி பேர் (1,03,30,084) இதுவரை குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.83 சதவீதமாக உயர்ந்துள்ளது.
• குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 1,01,45,902 ஆக பதிவாகியுள்ளது.
• தொடர்ந்து கேரளாவில் அதிகபட்சமாக 5,173 பேரும், மகாராஷ்டிராவில் 1,743 பேரும், அதைத்தொடர்ந்து குஜராத்தில் 704 பேரும் ஒரே நாளில் புதிதாக குணமடைந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1692065
(Release ID: 1692142)
Visitor Counter : 217
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Assamese
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Malayalam