சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 1.85 லட்சமாக சரிவு

Posted On: 23 JAN 2021 11:33AM by PIB Chennai

இந்தியாவில் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 1.85 லட்சமாக (1,85,662) குறைந்துள்ளது. இது மொத்த பாதிப்பில் வெறும் 1.74 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 14,256 புதிய பாதிப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், 17,130 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தற்போதைய மொத்த பாதிப்பில் இருந்து 3,026 குறைந்துள்ளது.

28 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் 5000-க்கும் குறைவானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 1,03,00,838 பேர் குணமடைந்துள்ள நிலையில்குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96.82 சதவீதமாக உயர்ந்துள்ளது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுவோருக்குமான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 1,01,15,176 ஆக பதிவாகியுள்ளது.

28 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் குணமடைந்தவர்களின் சதவீதம் தேசிய அளவைவிட அதிகமாக உள்ளது.

 

இன்று (ஜனவரி 23, 2021) காலை 8 மணி வரை, தமிழகத்தில் 51,651 பேர் உட்பட, நாடு முழுவதும் சுமார் 14 இலட்சம் (13,90,592) பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 6,241 முகாம்களில் 3,47,058 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. இதுவரை 24,408 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன.

புதிதாக குணமடைந்தவர்களில் 84.30 சதவீதத்தினர் 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். கேரளாவில் அதிகபட்சமாக 6,108 பேரும், மகாராஷ்டிராவில் 3,419 பேரும், அதைத்தொடர்ந்து கர்நாடகாவில் 890 பேரும் ஒரே நாளில் புதிதாகக் குணமடைந்துள்ளனர்.

79.99 சதவீத புதிய பாதிப்புகள் 6 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் மட்டுமே ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக தொடர்ந்து கேரளாவில் 6,753 பேரும், மகாராஷ்டிராவில் 2,779 பேரும், தமிழ்நாட்டில் 574 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் ஏற்பட்ட 152 உயிரிழப்புகளில் 75.66 சதவீதம், 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 50 பேரும், கேரளாவில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1691485

**********************



(Release ID: 1691541) Visitor Counter : 157