சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் மற்றும் தவறான தகவல் பிரச்னையை தீர்க்க, போஸ்டர் பிரசாரத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் ஹர்ஷ்வர்தன்

Posted On: 21 JAN 2021 2:10PM by PIB Chennai

கொவிட் தடுப்பூசி போட்டுக்கொள்ள தயக்கம் மற்றும் தவறான தகவல் பிரச்னையை தீர்க்க, போஸ்டர்கள் மூலமான தகவல், கல்வி (ஐஇசி)  பிரசாரத்தை டாக்டர் ஹர்ஷ்வர்தன் தொடங்கி வைத்தார். அப்போது, மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் திரு அஸ்வின் குமார் சவுபே, நிதி ஆயோக் சுதகாதாரத்துறை உறுப்பினர் டாக்டர் வி.கே.பால் ஆகியோர் உடன் இருந்தனர்.

2021 ஜனவரி 21ம் தேதி, காலை 7 மணி வரை, 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதார பணியாளர்களுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

நோயை ஒழிப்பதில், தடுப்பூசியின் பங்கு குறித்து விவரித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் கூறியதாவது:

போலியோ மற்றும் பெரியம்மை போன்றவற்றை மிகப் பெரியளவிலான தடுப்பூசி திட்டம் மூலம்தான் ஒழிக்க முடிந்தது.  தடுப்பூசி ஒரு முறை போட்டுக் கொண்டால், அந்த நபர் நோய் பாதிப்பில் இருந்து தப்புவதோடு, அவரால் மற்றவருக்கு பரவாது. இது சமூக பலனை அளிக்கும். இதனால் தான், 12 நோய்களுக்கு எதிரான இந்திரதனுஷ் தடுப்பூசி திட்டம் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்டது. இதேபோல், கொவிட் தடுப்பூசியும், நோய் பரவலை கட்டுப்படுத்தி அதை ஒழிக்கும்.

தடுப்பூசி பற்றிய தவறான பொய் பிரசாரத்துக்கு மக்கள் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சுகாதாரத்துறை அமைச்சகம், பத்திரிகை தகவல் அலுவலகம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம், மை கவ் இணையளம் போன்றவற்றிலிருந்து சரியான மற்றும் நம்பகமான தகவல்களை மக்கள் பெற வேண்டும்.

உண்மை சக்தி வாய்ந்தது மற்றும் மேலோங்கி நிற்கும். அதனால் தடுப்பூசி பற்றிய இந்த தகவல், கல்வி மற்றும் தொடர்பு போஸ்டர்களை, ஒவ்வொருவரும் பகிர வேண்டும். அப்போதுதான் உண்மை பலரை சென்றடையும்.

அனைத்து பிரபல மருத்துவமனைகளின்  மருத்துவர்களும், தடுப்பூசி போட்டுக் கொண்டு இந்த பணியை பாராட்டியுள்ளனர். அரசியல் நோக்கத்துக்காக, சிலர் மட்டும் தடுப்பூசி பற்றி வதந்திகளை பரப்பி, மக்களின் ஒரு பிரிவினர் இடையே தயக்கத்தை ஏற்படுத்துகின்றனர். 

உலக நாடுகள் இந்த தடுப்பூசிகளை நம்பிடம் கேட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால், நம்மில் சிலர், குறுகிய அரசியல் நோக்கத்துக்காக தவறான தகவலை பரப்புகின்றனர்.  அரசு மற்றும் தனியார் மருத்துவர்கள் மற்றும் இதர மருத்துவ பணியாளர்கள், இந்த கொவிட் 19 தடுப்பூசியை போட்டுக் கொண்டு, எந்தவித பக்க விளைவுகளும் இல்லாமல் பணிக்கு திரும்பியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1690821

******************


(Release ID: 1690959) Visitor Counter : 273