பிரதமர் அலுவலகம்

மணிப்பூர் மாநிலம் உருவான தினம்: பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 21 JAN 2021 8:58AM by PIB Chennai

மணிப்பூர் மாநிலம் உருவான தினமான இன்று பிரதமர் திரு.நரேந்திர மோடி, அம்மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

திரு.மோடி விடுத்துள்ள சுட்டுரைச் செய்தியில், “மணிப்பூர் மாநிலம் உருவான இந்நன்னாளில், அம்மாநில மக்களுக்கு எனது வாழ்த்துகள். தேச வளர்ச்சிக்கு மணிப்பூர் ஆற்றியுள்ள பங்கை எண்ணி இந்தியா பெருமிதப்படுகிறது. புத்தாக்கத்தின், விளையாட்டுத் திறமைகளின் ஆற்றல்மிக்க உறைவிடமாக இம்மாநிலம் திகழ்கிறது. முன்னேற்றப் பாதையில் வெற்றிநடை போட வேண்டும் என்று நான் மணிப்பூரை வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

 

***


(रिलीज़ आईडी: 1690738) आगंतुक पटल : 155
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Bengali , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam