பிரதமர் அலுவலகம்
திரு. ஜோ பைடன் பதவியேற்புக்கு பிரதமர் வாழ்த்து
प्रविष्टि तिथि:
20 JAN 2021 10:42PM by PIB Chennai
அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக பதவியேற்றுள்ள திரு. ஜோ பைடனுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் விடுத்துள்ள சுட்டுரை செய்திகளில் “அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக பதவியேற்றுள்ள திரு.ஜோ பைடனுக்கு எனது அன்பான வாழ்த்துகள். இந்தியா-அமெரிக்கா இடையிலான நட்புறவை வலுப்படுத்துவதற்கு அவருடன் இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்.
நம் முன் உள்ள பொதுவான சவால்களை ஒற்றுமையுடன் எதிர்கொள்வதற்கும், உலக அமைதி, பாதுகாப்புக்காக பாடுபடுவதற்கும், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அதிபராக தலைமையேற்று வெற்றிகரமாக பணியாற்றவும் எனது நல்வாழ்த்துகள்.
இந்திய-அமெரிக்க நட்புறவு பரஸ்பர விழுமியங்களின் அடிப்படையிலானது. கணிசமானதும், பன்முகத்தன்மையிலானதுமான இருதரப்பு செயல் திட்டத்தையும், வளர்ந்து வரும் பொருளாதார நிலைப்பாட்டையும், துடிப்பான மக்களுக்கு இடையேயான இணைப்பையும் நாம் கொண்டிருக்கிறோம். இந்திய-அமெரிக்க நட்புறவை சிறப்பான உயரங்களுக்கு எடுத்துச் செல்ல அதிபர் திரு.ஜோ பைடனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு உறுதி கொண்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
****
(रिलीज़ आईडी: 1690719)
आगंतुक पटल : 157
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam