கலாசாரத்துறை அமைச்சகம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை குறிக்கும் வகையில் ஜனவரி 23 “பராக்கிரம தினமாக” அறிவிப்பு

Posted On: 19 JAN 2021 4:00PM by PIB Chennai

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாளை 2021 ஜனவரி 23 முதல் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறப்பான முறையில் கொண்டாட இந்திய அரசு முடிவெடுத்துள்ளது. நிகழ்ச்சிகள் குறித்து முடிவெடுப்பதற்கும், கொண்டாட்டங்களை மேற்பார்வையிட்டு வழிகாட்டுவதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் நாட்டுக்கு ஆற்றியுள்ள தன்னலமற்ற சேவையையும், அவரது அணையாத விடுதலை உணர்வையும் போற்றும் வகையில், ஒவ்வொரு வருடமும் ஜனவரி 23-பராக்கிரம தினமாககொண்டாட மத்திய அரசு முடுவெடுத்துள்ளதுஇதன் மூலம், நாட்டு மக்கள், குறிப்பாக இளைஞர்கள், நேதாஜியைப் போன்று கடினமான காலங்களில் உறுதியுடன் செயல்படுவதற்கும், நாட்டுப் பற்றை தங்களுக்குள் வளர்த்துக் கொள்வதற்கும் ஊக்கம் பெறுவார்கள்.

ஜனவரி 23-பராக்கிரம தினமாகஅறிவிக்கும் அரசிதழ் அறிவிப்பும் வெளியிடப்பட்டுவிட்டது.

 

********


(Release ID: 1690070) Visitor Counter : 274