மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
2021 ஜேஇஇ, நீட் தேர்வுகள்: கடந்த ஆண்டின் பாடத்திட்டமே தொடரும்
प्रविष्टि तिथि:
19 JAN 2021 12:44PM by PIB Chennai
2021-ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஜேஇஇ, நீட் தேர்வுகளுக்கான பாடத் திட்டத்தில் மாற்றம் ஏதுமில்லை. எனினும், கடந்த ஆண்டுகளைப் போல அல்லாமல், ஜேஇஇ, நீட் தேர்வுகளில் வினாக்களைத் தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கப்படும்.
கடந்த ஆண்டின் பாடத்திட்டமே ஜேஇஇ (மெயின் 2021) தேர்வுக்கும் தொடரும். எனினும் மொத்தம் கேட்கப்படும் 90 கேள்விகளிலிருந்து (இயற்பியியல், வேதியியல, கணிதத்தில் தலா 30 கேள்விகள்) ஏதேனும் 75 கேள்விகளுக்கு (இயற்பியியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) பதில் அளிக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும். 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற ஜேஇஇ (மெயின்) தேர்வில், கேட்கப்பட்ட அனைத்து 75 கேள்விகளுக்கும் (இயற்பியியல், வேதியியல், கணிதத்தில் தலா 25 கேள்விகள்) மாணவர்கள் விடையளிக்க வேண்டியிருந்தது.
2021-ஆம் ஆண்டு நீட் (இளங்கலை) தேர்வுக்கான தேர்வு மாதிரி இன்னும் வெளியிடப்படவில்லை. எனினும், பாடத்திட்டத்தைக் குறைக்க வேண்டும் என்று நாடு முழுவதும் உள்ள சில வாரியங்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று, 2021 நீட் (இளங்கலை) தேர்வுத் தாளிலும் ஜேஇஇ (மெயின்) தேர்வைப் போன்று வினாக்களைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு மாணவர்களுக்கு அளிக்கப்படும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:
https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689931
-----
(रिलीज़ आईडी: 1689986)
आगंतुक पटल : 276
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Odia
,
Telugu
,
Malayalam
,
Assamese
,
Bengali
,
Manipuri
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Punjabi