சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

8 மாதங்களுக்கு பிறகு, தினசரி கொவிட் உயிரிழப்பு 145 ஆகக் குறைந்தது

Posted On: 18 JAN 2021 12:07PM by PIB Chennai

மைல்கல் சாதனையாக, இந்தியாவில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கையை விட இன்று ஒரு கோடியைத் தாண்டியது

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை இன்று 1,02,11,342-ஐத் தொட்டது. அதே நேரத்தில் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 2,08,012 ஆக உள்ளது. இரு பிரிவினருக்கு இடையேயான இடைவெளி 1,00,03,330 ஆக உள்ளது. கொவிட் சிகிச்சை பெறுபவர்களைவிட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 50 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் குணமடைந்தோர் வீதம் 96.59 சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், 14,457 பேர் குணமடைந்துள்ளனர். புதிதாக 13,788 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி தொற்று பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், தினசரி கொவிட் உயிரிழப்பு எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறதுகடந்த 24 மணி நேரத்தில் 145 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்தோரயமாக 8 மாதங்களுக்குப் (7 மாதங்கள் 23 நாட்கள்) பிறகு, இது மிகக் குறைவான அளவு.

புதிதாக குணம் அடைந்தவர்களில், 71.70 சதவீதம் பேர், 7 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

கேரளாவில் ஒரே நாளில் 4,408 பேரும், மகாராஷ்டிராவில் 2,342 பேரும், கர்நாடகாவில் 855 பேரும் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் 76.17 சதவீதம் பேர், 6 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும்  சேர்ந்தவர்கள்.

தினசரி கொவிட் பாதிப்பு அதிகபட்சமாக கேரளாவில் 5,005ஆக உள்ளது. இதையடுத்து மகாராஷ்டிராவில் 3,081 பேருக்கும், கர்நாடகாவில் 745 பேருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689611

******

 (Release ID: 1689611)



(Release ID: 1689691) Visitor Counter : 180