பிரதமர் அலுவலகம்

இந்தியாவை தன்னிறைவாக மாற்றுவதில் ஸ்டார்ட் அப்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன; பிரதமர் மோடி

Posted On: 16 JAN 2021 9:10PM by PIB Chennai

கொரோனா நெருக்கடி காலத்தில், இந்திய ஸ்டார்ட் அப்களின் தற்சார்பு நோக்கிய பங்களிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டினார். பிராரம்ப் ஸ்டார்ட்அப் இந்தியா சர்வதேச உச்சிமாநாட்டில் இன்று காணொளி காட்சி மூலம் அவர் உரையாற்றினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், , 45 சதவீதம் ஸ்டார்ட்அப்கள் இரண்டாம், மூன்றாம் நிலை நகரங்களில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.  அவை, உள்ளூர் உற்பத்தி பொருட்களின் வணிக முத்திரைகளாக திகழ்கின்றன. உள்ளூர் வாய்ப்புகளுக்கு ஏற்ப ஒவ்வொரு மாநிலமும் ஸ்டார்ட்அப்களுக்கு ஆதரவும், ஊக்குவிப்பும் அளித்து வருகின்றன. ஸ்டார்ட்அப் இந்தியா இயக்கத்தின் அங்கமாக நாட்டின் 80 சதவீத மாவட்டங்கள் தற்போது உள்ளன. மக்கள் தங்களது உணவுப் பழக்க வழக்கங்களில் மிகவும் கவனமாக உள்ளதால், வேளாண்மை, உணவு ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளதை பிரதமர் சுட்டிக்காட்டினார். ஒரு லட்சம் கோடி ரூபாய் மூலதன அடிப்படையுடன் வேளாண் கட்டமைப்பு நிதி உருவாக்கபட்டுள்ளதால், இந்தத் துறைகளின் வளர்ச்சியில் இந்தியா சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் புதிய வழிகள் மூலமாக, ஸ்டார்ட் அப்கள், விவசாயிகளுடன் கூட்டாக செயல்பட்டு வருகின்றனர். பண்ணைகளிலிருந்து தரமான பொருட்களை எளிதாகக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

கொரோனா நெருக்கடியில் தற்சார்பு இந்தியா இயக்கத்தின் பங்களிப்பு குறித்து பிரதமர் சுட்டிக்காட்டினார். கிருமிநாசினிகள், பிபிஇ உபகரணங்கள், அது தொடர்பான விநியோக சங்கிலித்தொடர் கிடைப்பதை உறுதி செய்வதில் ஸ்டார்ட்அப்கள் முக்கிய பங்காற்றியுள்ளன. வீட்டு வாயிலில் மளிகை பொருட்கள், மருந்துகள் விநியோகம் முன்களப் பணியாளர்களை அழைத்து வரும் போக்குவரத்து வசதி போன்ற உள்ளூர் தேவைகளை சமாளிக்கும் வகையிலும், ஆன்லைன் படிப்பு பொருட்களை வழங்குவதிலும்  அவர்கள் உன்னத பங்காற்றியுள்ளனர். துன்பத்திலும் வாய்ப்புகளை கண்டுபிடிப்பதில் ஸ்டார்ட்அப்களின் ஆர்வத்தையும், பேரிடர் காலத்தில் அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பிரதமர் பாராட்டினார்.

*****


(Release ID: 1689476) Visitor Counter : 133