சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
முதல் முறையாக கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை,மொத்த பாதிப்பில் 2 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தது - இந்தியா மைல் கல் சாதனை
Posted On:
17 JAN 2021 12:19PM by PIB Chennai
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருவதால், தினசரி பாதிப்பும் தொடர்ந்து குறைந்து வருகிறது.
முதல் முறையாக, இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை, மொத்த பாதிப்பில், 2 சதவீதத்துக்கும் குறைவாக(1.98 சதவீதம்) பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 15,144 பேருக்கு புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 2.08,826 ஆக உள்ளது. தினசரி பாதிப்பு கடந்த 10 நாட்களாக 20,000க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், 17,170 பேர் குணமடைந்துள்ளனர். குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1, 01,96,885-ஆகவும், குணமடைந்தோர் வீதம் 96.58 சதவீதமாகவும் உள்ளது.
நாட்டில் கொவிட் தொற்றால் ஏற்படும் தினசரி உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கடந்த 23 நாட்களாக தினசரி உயிரிழப்பு 300க்கும் கீழ் உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 181 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1689290
-----
(Release ID: 1689414)
Visitor Counter : 184