சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாளை தொடங்கவிருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கல் குறித்து டாக்டர் ஹர்ஷ் வர்தன் ஆய்வு
Posted On:
15 JAN 2021 5:23PM by PIB Chennai
நாடு முழுவதும் நாளை தொடங்கவிருக்கும் கொவிட்-19 தடுப்பு மருந்து வழங்கலுக்கான தாயர்நிலை குறித்து மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் நிர்மான் பவன் வளாகத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள கொவிட் கட்டுப்பாட்டு அறையை அவர் பார்வையிட்டார்.
தேசிய அளவிலான கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை 2021, ஜனவரி 16-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். நாடு முழுவதும் மேற்கொள்ளப்படுவதால், இது உலகின் மிகப் பெரிய தடுப்பூசி திட்டமாக இருக்கும் என்று டாக்டர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.
இந்த நிகழ்வின் போது, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களி்ல மொத்தம் 3006 இடங்கள் காணொலி காட்சி மூலம் இணைக்கப்படும். தொடக்க நாளில், ஒவ்வொரு இடத்திலும் சுமார் 100 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்படும்.
முன்னுரிமை அடிப்படையில் மேற்கொள்ளப்படும் இந்த தடுப்பூசி திட்டத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவை (ஐசிடிஎஸ்) ஊழியர்கள் உட்பட அரசு மற்றும் தனியார் துறை சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
கொவிட் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட சுகாதார அமைச்சர், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் உருவாக்கியுள்ள கொ-வின் என்ற தடுப்பு மருந்து வழங்கல் மேலாண்மைக்கான ஆன்லைன் டிஜிட்டல் தளத்தை பயன்படுத்தும் முறை குறித்து ஆய்வு செய்தார்.
இந்த பிரத்யேக டிஜிட்டல் தளத்தில் கொவிட் தடுப்பூசிகள் இருப்பு நிலவரம், அவற்றின் வெப்பநிலை மற்றும் தடுப்பூசி பயனாளிகளை கண்டறியும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தடுப்பூசி திட்ட மேலாளர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், இந்த மென்பொருள் வழங்கும்.
கொவிட்-19 தடுப்பு மருந்துகள் குறித்து உலவி வரும் தவறான தகவல்கள் குறித்து பேசிய அவர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட கொவிஷீல்ட் மற்றும் கொவாக்சின் ஆகியவை பாதுகாப்பானவையென்றும், செயல்திறன் மிக்கவை என்றும் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை பார்க்கவும்:
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1688819
-----
(Release ID: 1688896)
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam