மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்

பறவை காய்ச்சல் தற்போதைய நிலவரம்

Posted On: 08 JAN 2021 3:33PM by PIB Chennai

இது வரை, ஆறு மாநிலங்களில் (கேரளா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஹிமாச்சலப் பிரதேசம், ஹரியானா மற்றும் குஜராத்) பறவை காய்ச்சல் நோய் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளாவில் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ள இரண்டு மாவட்டங்களிலும் ஒழிப்பு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன. கிருமிநாசினி பணிகள் தற்போது நடந்து வருகின்றன.

பறவை காய்ச்சலால் இது வரை பாதிப்படையாத மாநிலங்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. பறவைகள் திடீரெனெ இறந்தால், தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுப்பதற்காக அது குறித்து உடனே தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

கண்காணிப்பு மற்றும் தொற்று நோய் குறித்த விசாரணைக்காக, கேரளா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களுக்கு மத்திய குழுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.

தில்லி ஹஸ்த்சல் கிராமத்தில் உள்ள டிடிஏ பூங்காவில் 16 பறவைகள் திடீரெனெ இறந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்த தில்லி தேசிய தலைநகர் பகுதியின் கால்நடை பராமரிப்பு துறை, மாதிரிகளை ஐசிஏஆர்-நிஹ்சத்திற்கு அனுப்பியுள்ளது. பரிசோதனை முடிவுகள் இன்னும் வரவில்லை.

கோழிப்பண்ணை விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் (முட்டை மற்றும் கோழிக்கறி நுகர்வோர்) இந்நோய் குறித்த விழிப்புணர்வை உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.

கோழிக்கறி மற்றும் முட்டைகளை உட்கொள்ளுதல் குறித்த நம்பிக்கையை நுகர்வோரிடம் மீண்டும் ஏற்படுத்துவதற்கான கடிதம் செயலாளரிடம் (கால்நடை பராமரிப்பு துறை) இருந்து சுகாதார அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

நுகர்வோர் நம்பிக்கையை பாதித்துள்ள வதந்திகளை தடுப்பதற்கு தேவையான அறிவுரைகளை வழங்குமாறு சுகாதார அமைச்சகம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பண்ணை கோழிகள் மற்றும் பொருட்களின் பாதுகாப்பு குறித்தும், அவற்றை வேகவைத்து / சமைத்து உண்பது பாதுகாப்பானது என்பது குறித்தும் விழிப்புணர்வை அதிகரிக்குமாறு மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன. இதற்கு மத்திய அரசின் ஆதரவு வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687083

**********************


(Release ID: 1687220) Visitor Counter : 240