சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிய வகை கொரோனா தொற்று பாதிப்பு: இந்தியாவில் 82 பேருக்கு சிகிச்சை

प्रविष्टि तिथि: 08 JAN 2021 12:06PM by PIB Chennai

இங்கிலாந்தில் தோன்றிய  புதிய கொரோனா நோய் தொற்றால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் சூழலில் கடந்த 24 மணி நேரத்தில் 18,139 பேர் மட்டுமே பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். தற்போது நாட்டில் 2,25,449 பேர் நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது மொத்த பாதிப்பில் வெறும் 2.16 சதவீதமாகும்.

கடந்த 24 மணி நேரத்தில் 20,539 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அண்மையில் ஒரு கோடியைக்  கடந்தது. தற்போது இந்தியாவில் மொத்தம் 1,00,37,398 பேர் (96.39%) குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கேரளாவில் 5639 பேரும், மகாராஷ்டிராவில் 3350 பேரும், மேற்கு வங்காளத்தில் 1295 பேரும் குணமடைந்துள்ளனர்.

புதிய தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கேரளாவில் தொடர்ந்து  அதிகரித்து  5051 ஆக பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் 3729 பேரும், சத்தீஸ்கரில் 1,010 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 234 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 76.50 சதவீதத்தினர் 8 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களை மட்டுமே  சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் 72 பேரும், கேரளாவில் 25 பேரும், தில்லியில் 19 பேரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1687036

**********************


(रिलीज़ आईडी: 1687140) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Malayalam