நிதி அமைச்சகம்

2020 டிசம்பரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,15,174 கோடியைக் கடந்து சாதனை

Posted On: 01 JAN 2021 1:21PM by PIB Chennai

கடந்த 2020 டிசம்பர் மாதம் வசூலான ஜிஎஸ்டி மொத்த வருவாய் ரூ.1,15,174 கோடி. இதில் மத்திய ஜிஎஸ்டி ரூ.21,365 கோடி, மாநில ஜிஎஸ்டி ரூ. 27,804 கோடி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி ரூ.57,426 கோடி (இறக்குமதியில் வசூலித்த ரூ.27,050 கோடி உட்பட) மற்றும் கூடுதல் வரி ரூ.8,579 கோடி (இறக்குமதியில் வசூலித்த ரூ.971 கோடி உட்பட).  நவம்பர் மாதத்துக்கான ஜிஎஸ்டிஆர்-3பி தாக்கலின் மொத்த எண்ணிக்கை, டிசம்பர் 31ஆம் தேதி வரை 87 இலட்சம்.

ஒருங்கிணைந்த ஜிஎஸ்டியிலிருந்து மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.23,276 கோடியும், மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.17,681 கோடியும் மத்திய அரசு வழங்கியுள்ளது. மத்திய, மாநில அரசுகளுக்கு டிசம்பரில் கிடைத்த மொத்த வருவாய்  மத்திய ஜிஎஸ்டிக்கு ரூ.44,641 கோடி மற்றும் மாநில ஜிஎஸ்டிக்கு ரூ.45,485 கோடி.

2020ஆம் ஆண்டின் டிசம்பர் ஜிஎஸ்டி வருவாய், கடந்தாண்டு இதே காலத்தை விட 12 சதவீதம் அதிகம். இந்த மாதத்தில், இறக்குமதி மூலம் கிடைத்த வருவாய் 27 சதவீதம் அதிகம் மற்றும்  உள்நாட்டுப் பரிமாற்ற வருவாய் (இறக்குமதி சேவைகள் உட்பட), கடந்தாண்டு இதே காலத்தை விட 8 சதவீதம் அதிகம்.

ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து,  2020 டிசம்பர் மாதம் கிடைத்த வருவாய் மிக அதிகம். முதல் முறையாக ரூ.1.15 இலட்சம் கோடியைக் கடந்துள்ளதுஇதுவரை, கடந்த 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வசூலான ஜிஎஸ்டி ரூ.1,13,866 கோடியே மிக அதிக தொகையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைப் பார்க்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1685332

------



(Release ID: 1685426) Visitor Counter : 299