சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களை ஜனவரி 7-ஆம் தேதி வரை தற்காலிகமாக ரத்து செய்ய சுகாதார அமைச்சகம் பரிந்துரை

Posted On: 30 DEC 2020 11:39AM by PIB Chennai

இங்கிலாந்திலிருந்து இந்தியா வரும் விமானங்களின் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டிருப்பதை ஜனவரி 7-ஆம் தேதி (வியாழன்வரை நீட்டிக்குமாறுசுகாதார அமைச்சகம்சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

சுகாதார சேவைகளுக்கான தலைமை இயக்குநரின் தலைமையிலான இணை கண்காணிப்புக் குழு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் தலைமை இயக்குநர்நிதி ஆயோக்கின் சுகாதார உறுப்பினர் தலைமையிலான  தேசிய பணிக்குழு ஆகியவை தெரிவித்த ஆலோசனையின் பேரில் இந்த பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனவரி 7-ஆம் தேதிக்குப் பிறகு இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு குறைந்த அளவிலான விமானங்கள் கடுமையான கண்காணிப்புக்குப் பின்னர் அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் சிவில் விமான அமைச்சகத்திடம் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளதுஇதை செயல்படுத்துவது தொடர்பாக சிவில் விமான அமைச்சகம்சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தை ஆலோசித்து முடிவு எடுக்கலாம்

 

தொற்றுப் பரவலை அதிகரிக்கும் சாத்தியக்கூறுகள் தென்படும் அனைத்து நிகழ்வுகளையும் தீவிரமாகக் கண்காணிக்கும்படியும்,  வரவிருக்கும் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளின் போது கூட்ட நெரிசலை கட்டுப்படுத்துமாறும்அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய சுகாதார செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1684551

------


(Release ID: 1684704)