பிரதமர் அலுவலகம்

நாட்டின் ஓட்டுநர் இல்லாத முதல் ரயில் போக்குவரத்தை தில்லி மெட்ரோவின் மெஜந்தா வழித்தடத்தில் பிரதமர் தொடங்கிவைத்தார்


விரைவு வழித்தடத்தில் முழுவதும் செயல்பாட்டுக்கு வந்துள்ள தேசிய பொதுப் பயண அட்டை வசதியையும் தொடங்கி வைத்தார்

நகரமயமாக்கலை ஒரு சவாலாக பார்க்கக்கூடாது. அதை நாட்டில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கும் வாழ்க்கை முறையை எளிதாக்கி கொள்ளவும் வாய்ப்பாகப் பயன்படுத்த வேண்டும்: பிரதமர்

மண்டல விரைவு போக்குவரத்து(ஆர்ஆர்டிஎஸ்), மெட்ரோ லைட், மெட்ரோ நியோ மற்றும் வாட்டர் மெட்ரோ என பல வகை மெட்ரோக்கள் பணி நடந்து கொண்டிருக்கிறது : பிரதமர்

பல பகுதிகளில் சேவைகளை ஒருங்கிணைக்கும் பணிகளைப் பட்டியலிட்டார்

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சேவை இருக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியா இணைந்துள்ளது : பிரதமர்

Posted On: 28 DEC 2020 12:26PM by PIB Chennai

நாட்டின் ஓட்டுநர் இல்லா முதல் ரயில் போக்குவரத்தை, தில்லி மெட்ரோ மெஜந்தா வழித்தடத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அகமதாபாத்தில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட தேசியப் பொது பயண அட்டை, விமான நிலைய விரைவு வழித்தடத்திலும் இன்று நீட்டிக்கப்பட்டது. மத்திய அமைச்சர் திரு ஹர்தீப் சிங் பூரி மற்றும் தில்லி முதல்வர் திரு அரவிந்த் கேஜ்ரிவால் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், ‘‘இன்றைய நிகழ்வு, நகர்ப்புற வளர்ச்சியை எதிர்காலத்துக்குத் தயாராக்குவதற்கான முயற்சி’’ என குறிப்பிட்டார்.  எதிர்கால தேவைகளுக்கு நாட்டை தயாராக்குவது என்று அரசு நிர்வாகத்தின் முக்கியமான பொறுப்பு என அவர் கூறினார்சில பத்தாண்டுகளுக்கு முன்புநகரமயமாக்கலின் தேவை உணரப்பட்டபோது, எதிர்கால தேவைக்கு அதிக கவனம் செலுத்தப்படவில்லை என்றும், அரை மனதுடன் பணிகள் நடந்தன மற்றும் குழப்பம் நிலவியது என்றும் அவர் கூறினார்இது போல் இல்லாமல், நவீன சிந்தனை என்பது, நகரமயமாக்கலை சவாலாக பார்க்க கூடாது; நாட்டில் சிறந்த உள்கட்டமைப்பை உருவாக்கவும் எளிதான வாழ்க்கையை அதிகரிக்கும் வாய்ப்பாகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என அவர் கூறினார்இந்த மாறுபட்ட சிந்தனை, தற்போது, நகரமயமாக்கலின் ஒவ்வொரு கோணத்திலும் பார்க்கப்படுகிறது என அவர் கூறினார்.  2014ம் ஆண்டில் 5 நகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் இருந்தது. இன்று 18 நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை உள்ளது. 2025ம் ஆண்டுக்குள் 25க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு இத்திட்டத்தை நாம் விரிவுபடுத்தப் போகிறோம்.  2014ம் ஆண்டில் 248 கி.மீ தூரத்துக்கு மட்டுமே மெட்ரோ ரயில் பாதைகள் செயல்பாட்டில் இருந்தன. இன்று சுமார் 3 மடங்குக்கும் அதிகமாக 700 கி.மீட்டருக்கு மேல் உள்ளன. 2025ம் ஆண்டுக்குள், இதை 1700 கி.மீ தூரமாக விரிவுபடுத்த நாம் முயற்சிக்கிறோம்இவை வெறும் எண்ணிக்கை மட்டும் அல்ல, அவை கோடிக்கணக்கான இந்தியர்கள் தங்களது  வாழ்க்கையை எளிதாக  வாழ்வதற்கான சான்றாகும். இவை செங்கல், கல், கான்கிரீட் மற்றும் இரும்பு ஆகியவற்றால் செய்யப்பட்ட கட்டமைப்புகள் மட்டுமல்ல. நாட்டின் நடுத்தர  மக்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்கான சான்றுகள் என அவர் வலியுறுத்தினார்.

அரசு  முதல் முறையாக மெட்ரோ கொள்கையை வகுத்து, அதை அனைத்து உத்திகளுடன்  அமல்படுத்தியது. உள்ளூர் தேவைக்கேற்ப வேலை செய்ய, உள்ளூர் தரங்களை மேம்படுத்தஇந்தியாவில் தயாரியுங்கள் திட்டத்தை விரிவுபடுத்த, நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வலியறுத்தப்பட்டதுமெட்ரோ ரயிலின் விரிவாக்கம், நவீன போக்குவரத்து முறைகள், நகர மக்களின் தேவைகளுக்கும் அங்குள்ள தொழில்முறை வாழ்க்கைக்கு  ஏற்பவும் பயன்படுத்தப்பட வேண்டும்.   வெவ்வேறு நகரங்களில் பல்வேறு வகையான மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுவதற்கான காரணம் இதுதான்  என அவர் கூறினார்.

பணி நடந்து கொண்டிருக்கும் பல்வேறு மெட்ரோ ரயில் சேவைகளையும் பிரதமர் பட்டியலிட்டார்தில்லி மற்றும் மீரட் இடையேயான மண்டல விரைவு போக்குவரத்து அமைப்பானது (ஆர்ஆர்டிஎஸ்) பயண நேரத்தை ஒரு மணி நேரத்துக்கும் கீழ் குறைக்கும்பயணிகள் குறைவாக இருக்கும் நகரங்களில்  மெட்ரோ லைட் சேவைகளை வழங்குவதற்கான  பணி நடந்து கொண்டிருக்கிறது என அவர் கூறினார்இது வழக்கமான மெட்ரோ செலவில் 40 சதவீதத்தில் உருவாக்கப்படும். பயணிகள் குறைவாக இருக்கும் நகரங்களில் மெட்ரோ நியோ பணி நடந்து கொண்டிருக்கிறது என அவர் மேலும் கூறினார். இது  வழக்கமான மெட்ரோ ரயில் திட்ட செலவில் 25 சதவீதத்தில் உருவாக்கப்படும்.

இதேபோல், வாட்டர் மெட்ரோ சேவைகள் வழங்குவது பற்றியும் நாங்கள் திட்டமிட்டு  கொண்டிருக்கிறோம். நீண்ட நீர் நிலைகள் உள்ள நகரங்களில், வாட்டர் மெட்ரோ பணி நடந்து கொண்டிருக்கிறது. இது தீவுகளில் வசிக்கும் மக்களுக்கும் போக்குவரத்து இணைப்பை வழங்கும்.

இன்று மெட்ரோ சேவையானது பொது போக்குவரத்தாக மட்டுமே இருக்காது, மாசுவை குறைக்கும் மிகச் சிறந்த வழியாகவும் இருக்கும். மெட்ரோ இணைப்பு மூலம் சாலைகளில் மாசு மற்றும் போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்திய ஆயிரக்கணக்கான வாகனங்கள் குறைந்துள்ளன.

மெட்ரோ சேவைகள் விரிவாக்கத்துக்கு உள்நாட்டு உற்பத்தி முக்கியமானது. இந்தியாவில் தயாரியுங்கள் திட்டமானது செலவைக் குறைத்து, அன்னிய செலாவணியை சேமிக்க உதவியது.  மேலும் இது நாட்டில் அதிக வேலை வாய்ப்புகளையும் உருவாக்குகிறதுபலவகையான ரயில் எஞ்சின்களின் தயாரிப்பை தரப்படுத்தியன் மூலம், ஒவ்வொரு ரயில் பெட்டியின் விலை ரூ.12 கோடியிலிருந்து  ரூ.8 கோடியாக தற்போது குறைந்துள்ளது. இன்று 4 பெரிய நிறுவனங்கள் மெட்ரோ ரயில் பெட்டிகளை இந்தியாவில் தயாரிக்கின்றன. பல நிறுவனங்கள் மெட்ரோ ரயில் தயாரிப்புக்கான பொருட்களை உற்பத்தி செய்கின்றன. இது இந்தியாவில் தயாரியுங்கள் திட்டத்துக்கும், தற்சார்பு இந்தியா பிரசாரத்துக்கும் உதவுகிறது என பிரதமர் கூறினார்

ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரயில் சாதனை மூலம், இது போன்ற வசதிகள் இருக்கும் சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளது என பிரதமர் கூறினார். ரயில்கள் நிறுத்தப்படும் போது 50 சதவீத எரிசக்தியானது மின் தொகுப்புக்கு செல்கிறது. மெட்ரோ ரயில் திட்டத்தில் இன்று 130 மெகாவாட் சூரிய மின்சக்தி உற்பத்தி செய்யப்படுகிறது. இது 600 மெகா வாட்டாக அதிகரிக்கப்படும்.

பொது பயண அட்டை குறித்துப் பேசியபோது பிரதமர்,  நவீனமயமாக்கலுக்கான அதே தரத்தையும் வசதிகளையும் வழங்குவது முக்கியமானது எனக் குறிப்பிட்டார். தேசிய அளவிலான பொது பயண அட்டை முக்கியமான நடவடிக்கை. இந்த ஒரு பயண அட்டை, பயணிகள் எங்கு சென்றாலும் எந்த பொது போக்குவரத்தை பயன்படுத்தினாலும் ஒருங்கிணைந்த சேவையை வழங்குகிறது.

பொது பயண அட்டை ஒருங்கிணைப்பு முறை மூலம், நாட்டின் வலிமை திறம்பட ஒருங்கிணைக்கப்படுகிறது என பிரதமர் கூறினார்.  ‘‘ஒரே நாடு, ஒரே பயண அட்டை’’ மாதிரி, கடந்த காலங்களில் பல செயல்முறைகளை நமது அரசு ஒருங்கிணைத்துள்ளது’’ என திரு நரேந்திர மோடி கூறினார்.

ஒரே நாடு, ஒரே பாஸ்ட் டேக் என்பது  நாடு முழுவதும் நெடுஞ்சாலை போக்குவரத்தை தடையில்லாமல் ஆக்கியுள்ளது. இது பயணிகளுக்கு தாமதம் மற்றும் போக்குவரத்து நெரிசலை குறைத்துள்ளது. ஜிஎஸ்டி போன்ற ஒரே நாடு, ஒரே வரி முறையானது வரி அமைப்பில் உள்ள சிக்கலை முடிவுக்கு கொண்டு வந்து மறைமுக வரியில் சீரான அமைப்பை வழங்கியது. ஒரே நாடு, ஒரே மின்தொகுப்பு முறையானது நாட்டின் அனைத்து பகுதிகளிலும், போதிய மற்றும் தொடர் மின் விநியோகத்தை உறுதி செய்கிறது. மின் இழப்பும் குறைந்துள்ளது.

ஒரே நாடு, ஒரே எரிவாயு விநியோகத் தொகுப்பு, முன்பு எரிவாயு  பயன்பாடு கனவாக இருந்த பகுதிகளில், எரிவாயு அடிப்படையிலான வாழ்க்கை மற்றும் பொருளாதாரத்தை உறுதி செய்துள்ளது. ஆயுஷ்மான் பாரத் போன்ற ஒரே நாடு, ஒரே சுகாதார காப்பீடு திட்டம் மூலம் கோடிக்கணக்கான இந்திய மக்கள் எங்கு சென்றாலும் பயன் அடைகின்றனர். ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு குடிபெயரும் மக்கள், ஒரே நாடு, ஒரே ரேசன் அட்டை திட்டம் மூலம், புதிய ரேசன் அட்டை பெறும் சிக்கலில் இருந்து விடுபட்டுள்ளனர்அதேபோல், புதிய வேளாண் சீர்திருத்தங்கள் மற்றும் -நாம் ஏற்பாடு மூலம்  ஒரு நாடு, ஒரே வேளாண் சந்தை என்பதை நோக்கி நாடு சென்று கொண்டிருக்கிறது.

*****************



(Release ID: 1684110) Visitor Counter : 215