பிரதமர் அலுவலகம்

நியூ பாபூர் - நியூ குர்ஜா சரக்கு ரயில் வழித்தடம் மற்றும் கிழக்கத்திய பிரத்யேக சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் டிசம்பர் 29ஆம் தேதி தொடங்கி வைக்கிறார்

Posted On: 27 DEC 2020 3:52PM by PIB Chennai

.நியூ பாபூர் - நியூ குர்ஜா வழித்தடத்தில் கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தை (இடிஎப்சி) பிரதமர் திரு. நரேந்திர மோடி டிசம்பர் 29ஆம் தேதி காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.  இந்நிகழ்ச்சியின் போது, உத்தரப்பிரதேசம் பிரயாக்ராஜ்-இல்,  கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையத்தையும் (ஓசிசி) பிரதமர் தொடங்கி வைக்கிறார்.  உத்தரப்பிரதேச ஆளுநர் திருமதி.ஆனந்திபென் படேல், உத்தரப்பிரதேச முதல்வர் திரு யோகி ஆதித்யநாத் மற்றும் ரயில்வே  அமைச்சர் திரு. பியூஷ் கோயல் ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.

351 கி.மீ நீளமுள்ள நியூ பாபூர் - நியூ குர்ஜா  ரயில் போக்குவரத்து வழித்தடம் உத்தரப்பிரதேசத்தில் ரூ.5,750 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த வழித்தடம் உள்ளூர்த் தொழில்களான அலுமினியம் தொழிற்சாலைகள் ( கான்பூர் தேகத் மாவட்டத்தின் புக்ரயான் மண்டலம்), பால்வளத் துறை (அவுரையா மாவட்டம்), ஜவுளி உற்பத்தி (எடவா மாவட்டம்), கண்ணாடித் தொழிற்சாலைகள் (பிரோசாபாத் மாவட்டம்), பானைத் தயாரிப்புத் தொழில் ( புலந்சாகர் மாவட்டத்தின் குர்ஜா), பெருங்காய உற்பத்தி (ஹத்ரஸ் மாவட்டம்) மற்றும் பூட்டு மற்றும் உலோகப் பொருள் தொழிற்சாலைகள் (அலிகர் மாவட்டம்) போன்றவற்றுக்கு புதிய வாய்ப்புகளை ஏற்படுத்தும். மேலும், இந்த வழித்தடம், கான்பூர்- தில்லி இடையில் உள்ள முக்கிய வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும். இந்திய ரயில்வே விரைவு ரயில்களை இயக்க வழிவகுக்கும்.

பிரயாக்ராஜில் அமைக்கப்படும் நவீன சரக்குப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மையம் (ஓசிசி), கிழக்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் போக்குவரத்தின் கட்டுப்பாட்டு மையமாகச் செயல்படும்.  இந்த ஓசிசி, உலகளவில் மிகப்பெரிய அமைப்புகளில் ஒன்று. மிக நவீன வடிவில் இது சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.  இந்தக் கட்டிடம் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையில் கிரிகா 4’ தரத்தில் சுகம்யா பாரத் திட்டத்தின்விதிமுறைகளின் படி உருவாக்கப்பட்டுள்ளது.

கிழக்கத்திய பிரத்யேக சரக்கு வழித்தடம் (இடிஎப்சி) பற்றி:

இடிஎப்சி வழித்தடம் (1856 கி.மீ) லூதியானா (பஞ்சாப்) அருகில் உள்ள சானேவால் பகுதியிலிருந்து  பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் ஜார்கண்ட் வழியாக மேற்குவங்கத்தின் டன்குனியில் முடிவடைகிறது.  இதை இந்தியாவின் பிரத்யேக  சரக்குப் போக்குவரத்துக் கார்பரேஷன் அமைத்து வருகிறது. சரக்கு ரயில் போக்குவரத்து வழித்தடம் அமைப்பதற்காகவே இந்த நிறுவனம் ஏற்படுத்தப்பட்டது.  இந்த நிறுவனம் மேற்கத்திய பிரத்யேக சரக்கு ரயில் வழித்தடத்தையும் அமைத்து வருகிறது. இது உத்தரப் பிரதேசத்தில் தாத்ரியையும், மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தையும் இணைக்கிறது. இது உத்தரப்பிரதேசம், ஹரியானா, ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவை கடந்து செல்கிறது. 

**********************



(Release ID: 1683999) Visitor Counter : 159