நிதி அமைச்சகம்

தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்களுக்கு சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக ரூ 6,000 கோடி

Posted On: 21 DEC 2020 1:48PM by PIB Chennai

சரக்கு மற்றும் சேவை வரி இழப்பீட்டிற்காக தமிழகம் உள்ளிட்ட 23 மாநிலங்கள் மற்றும் 3 யூனியன் பிரதேசங்களுக்கு எட்டாவது வாரத் தவணையாக ரூ 6,000 கோடியை மத்திய நிதி அமைச்சகம் வழங்கியுள்ளது. இதில்ரூ. 5,516.60 கோடி 23 மாநிலங்களுக்கும், சட்டமன்றங்கள் இடம்பெற்றுள்ள தில்லி, ஜம்மு-காஷ்மீர் மற்றும் புதுச்சேரி ஆகியயூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. எஞ்சியுள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகியவற்றிற்கு சரக்கு மற்றும் சேவை செயல்பாடுகளின் மூலமான வருவாயில் இடைவெளி இல்லை.

4.1902 சதவீத வட்டிக்கு இந்த வாரத்திற்கான கடன் தொகையை மத்திய அரசு பெற்றுள்ளது. இதுவரை சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் ரூ 48,000 கோடி, 4.6986% வட்டியில் பெறப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ. 1,06,830 கோடியை, மாநிலங்கள் கூடுதலாக பெறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள கடன் தொகையின்படி தமிழகத்திற்கு ரூ.3191.24 கோடி, சிறப்பு கடன் சாளரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர, ரூ. 9,627 கோடியை (0.50%) கூடுதலாக மாநிலம் பெறுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682355

*******

(Release ID: 1682355)(Release ID: 1682405) Visitor Counter : 77