சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் கொரோனா பாதிப்பு 3.05 லட்சமாகக் குறைவு
Posted On:
20 DEC 2020 11:28AM by PIB Chennai
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து, தற்போது 3.05 லட்சமாக (3,05,344) உள்ளது.
நாளொன்றில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரிப்பதாலும், உயிரிழப்புகள் குறைவதாலும், தேசிய அளவில் பாதிக்கப்படுவோரின் வீதம் குறைந்து வருகிறது.
இந்தியாவில் கொரோனா நோய்த் தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது 3.04 சதவீதம் பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணிநேரத்தில் 29,690 பேர் குணமடைந்துள்ளனர். நாட்டின் மொத்த பாதிப்பில் 66 சதவீதம், 10 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் பதிவாகியுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 26,624 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 21- ஆவது நாளாக ஒரு நாளின் பாதிப்பு 40,000-க்கும் குறைவாகப் பதிவாகியுள்ளது.
நாட்டில் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 96 லட்சத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறது (95,80,402). குணமடைந்தோர் மற்றும் பாதிக்கப்பட்டோர் ஆகியோரிடையேயான இடைவெளி தொடர்ந்து அதிகரித்து, தற்போது 95.51 சதவீதமாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 341 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1682122
------
(Release ID: 1682176)
Visitor Counter : 147
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam