சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
நாட்டில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு மொத்த பாதிப்பில் 3.62 சதவீதமாக குறைந்தது
Posted On:
13 DEC 2020 10:52AM by PIB Chennai
இந்தியாவில் கொவிட் சிகிச்சை பெறுபவர்களின் அளவு, மொத்த பாதிப்பில் 3.62 சதவீதமாக குறைந்துள்ளது.
தினசரி பாதிப்பைவிட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், நாட்டில் தற்போது சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 3,56,546-ஆக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் 30, 254 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் 33,136 பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கையில் 3,273 குறைந்துள்ளது.
குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை இன்று 93,57,464-ஆக உள்ளது. குணமடைந்தோருக்கும், சிகிச்சை பெறுபவர்களுக்குமான இடைவெளி இன்று 90 லட்சத்தை (90,00,918) கடந்துள்ளது. குணமடைந்தோர் வீதம் 95 சதவீதத்தை ( 94.93%) நெருங்குகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் 391 பேர் உயிரிழந்தள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1680335
**********************
(Release ID: 1680368)
Visitor Counter : 154
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu