பிரதமர் அலுவலகம்

இஸ்ரேல் மற்றும் யூத மக்களுக்கு பிரதமர் ஹனுக்கா தின வாழ்த்து

प्रविष्टि तिथि: 10 DEC 2020 7:08PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஹனுக்கா பண்டிகையைக் கொண்டாடும் இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலுமுள்ள யூத நண்பர்களுக்கும் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், “இஸ்ரேல் மக்களுக்கும், உலகெங்கிலுமுள்ள யூத நண்பர்களுக்கும் ஹனுக்கா தின வாழ்த்துகள். இந்தப் பண்டிகை தினம் நமது வாழ்க்கையில் அமைதியையும், ஒளியையும் ஏற்படுத்துவதுடன், நம் மக்களிடையேயான நல்லுறவை வளப்படுத்தட்டும்என்று தெரிவித்துள்ளார்.

இந்த ட்விட்டர் செய்தியில் இஸ்ரேல் நாட்டின் பிரதமர் திரு.பெஞ்சமின் நெதன்யாகு, அதிபர் திரு ரூவன் ரிவ்லின் ஆகியோர் இணைக்கப்பட்டுள்ளனர்.  பிரதமர் திரு நரேந்திர மோடி ஹீப்ரு மொழியில் ட்வீட் செய்துள்ளார்.

•••••••••••••


(रिलीज़ आईडी: 1679787) आगंतुक पटल : 211
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada