வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் வர்த்தக வாரியத்தின் கூட்டம் நாளை நடைபெறுகிறது

Posted On: 01 DEC 2020 12:25PM by PIB Chennai

மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் திரு பியூஷ் கோயல் தலைமையில் வர்த்தக வாரியத்தின் கூட்டம், நாளை (புதன்கிழமை, டிசம்பர் 2, 2020) காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும்.

புதிய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கை (2021-26), உள்நாட்டுத் தயாரிப்பு மற்றும் ஏற்றுமதியை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான வியூகங்கள் மற்றும் நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கு முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான வியூகங்கள், ஏற்றுமதி மற்றும் இறக்குமதிகளின் செயல்திறன் போன்றவை குறித்தும் கூட்டத்தில் கருத்துக்கள் பரிமாறப்படும்.

வர்த்தகம் மற்றும் தொழில் இணை அமைச்சர்கள் திரு சோம் பர்காஷ், திரு ஹர்தீப் சிங் புரி, பல்வேறு துறைகளின் செயலாளர்கள், நிதி ஆயோக் தலைவர் உள்ளிட்டோர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677318

************


(Release ID: 1677389)