நிதி அமைச்சகம்
நவம்பர் 2020-ல் ரூபாய் 1,04,963 கோடி சரக்கு மற்றும் சேவை வரியாக வசூல்
இடுகை இடப்பட்ட நாள்:
01 DEC 2020 1:45PM by PIB Chennai
2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் மொத்த சரக்கு மற்றும் சேவை வரியாக ரூபாய் 1,04,963 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 19,189 கோடியும், மாநில சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 25,540 கோடியும், ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரி ரூபாய் 51,992 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 22,078 கோடி உட்பட), செஸ் வரி ரூபாய் 8,242 கோடியும் (சரக்குகளின் இறக்குமதியின் மூலம் பெறப்பட்ட ரூபாய் 809 கோடி உட்பட) அடங்கும்.
ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து வழக்கமான பைசல் தொகையாக மத்திய சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 22,293 கோடியையும் மாநில சரக்கு மற்றும் சேவை வரிக்கு ரூபாய் 16,286 கோடியையும் அரசு வழங்கியுள்ளது.
கடந்த ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தின் வருவாய் 1.4 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1677332
****************
(வெளியீட்டு அடையாள எண்: 1677387)
வருகையாளர் எண்ணிக்கை : 318
இந்த வெளியீட்டை படிக்க:
Kannada
,
Assamese
,
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Odia
,
Telugu
,
Malayalam