சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தைக் கடந்தது

प्रविष्टि तिथि: 29 NOV 2020 1:31PM by PIB Chennai

இந்தியாவில் தற்போது 4,53,956 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 4.83 சதவீதமாகும்.

கடந்த 24 மணிநேரத்தில் 41,810 பேருக்கு தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  இதில் 70.43% பேர் மகாராஷ்டிரா, கேரளா, தில்லி, மேற்கு வங்கம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் சட்டீஸ்கர் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.

கடந்த 24 மணிநேரத்தில் 42,298 பேர் குணமடைந்துள்ளனர்.  இதன்மூலம் நாட்டில் குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 88 லட்சத்தைக் (88,02,267) கடந்து, 93.71 சதவீதமாக இன்று பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் 496 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 70.97 சதவீதம் பேர் தில்லி, மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹரியானா, பஞ்சாப், கேரளா, உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள்.  22 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தேசிய அளவைவிட குறைவாகப் பதிவாகியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1676951

*******************


(रिलीज़ आईडी: 1676976) आगंतुक पटल : 161
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Marathi , English , Urdu , हिन्दी , Bengali , Manipuri , Assamese , Punjabi , Gujarati , Telugu , Kannada , Malayalam