பிரதமர் அலுவலகம்

இங்கிலாந்து பிரதமர் திரு போரிஸ் ஜான்சன் உடன் பிரதமர் தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 27 NOV 2020 7:48PM by PIB Chennai

இங்கிலாந்து பிரதமர் மேன்மைமிகு திரு போரிஸ் ஜான்சன் உடன் பிரதமர் திரு நரேந்திர மோடி தொலைபேசி மூலம் இன்று உரையாடினார்.

கொவிட்-19 பெருந்தொற்றின் சவால்களை பற்றி கருத்துகளை பரிமாறிக் கொண்ட இரு தலைவர்களும், தடுப்பு மருந்து உருவாக்கம் மற்றும் உற்பத்தியில் இந்தியா மற்றும் இங்கிலாந்துக்கிடையேயான நம்பிக்கை அளிக்கும் ஒத்துழைப்பை ஆய்வு செய்தனர்.

பிரெக்சிட் மற்றும் கொவிட்டுக்கு பிந்தைய காலத்தில் இந்தியா, இங்கிலாந்துக்கிடையேயான ஒத்துழைப்பில் பெரும் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்கான அவாவை இரு தலைவர்களும் உறுதிப்படுத்தினர். வர்த்தகம் மற்றும் முதலீடு, அறிவியல் ஆராய்ச்சி, பணியாளர்கள் மற்றும் மாணவர்களின் போக்குவரத்து, ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் உள்ளன என்று தலைவர்கள் ஒப்புக்கொண்டனர்.

பருவநிலை மாற்றத்திற்கு எதிரான போரில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இணைந்து செயல்படுவது குறித்து குறிப்பாக பேசிய இரு பிரதமர்களும், சர்வதேச சூரியசக்தி கூட்டணி மற்றும் பேரிடர் எதிர்ப்பு உள்கட்டமைப்பு கூட்டணி ஆகிய தளங்களில் இருக்கும் ஒத்துழைப்பை பாராட்டினர்.

இந்திய-இங்கிலாந்து கூட்டுறவுக்கான நீண்டகாலத் திட்டத்தை இரு நாட்டு அதிகாரிகளும் இணைந்து விரைந்து வகுப்பார்கள் என்று தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.

*******************

 


(रिलीज़ आईडी: 1676595) आगंतुक पटल : 246
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam