பிரதமர் அலுவலகம்

12ஆவது பிரிக்ஸ் மெய்நிகர் உச்சிமாநாட்டில் பிரமதரின் இடையீட்டு உரை

Posted On: 17 NOV 2020 7:04PM by PIB Chennai

மேன்மை மிக்கவர்களே,

 

பல்வேறு பிரிக்ஸ் நிறுவனங்கள் ஏற்பாடு செய்த இந்த மாநாட்டிற்கு நன்றி. பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் 10 வது கூட்டத்தை மதிப்பாய்வு செய்த திரு பட்ருஷேவுக்கு நன்றி கூறுகிறேன்.

 

நான் முன்பு கூறியது போல், பயங்கரவாதத்தை முறியடிப்பதற்கான பிரிக்ஸ் உத்தியை இறுதி செய்தது முக்கியமான சாதனை. நமது தேசிய பாதுகாப்பு முகமைகள், ஒரு பயங்கரவாத எதிர்ப்பு செயல் திட்டத்தை விவாதிக்க வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

 

பிரிக்ஸ் வர்த்தக கவுன்சிலின் இடைக்காலத் தலைவர் திரு. செர்ஜி கேட்ரின் அவர்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன்.

 

நம்மிடையேயான பொருளாதார ஒருங்கிணைப்பின் முக்கிய பணி, தனியார் துறையின் கைகளில் இருக்கும். நமது இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர் இலக்குக்கு கொண்டு செல்ல, பிரிக்ஸ் வணிக கவுன்சில் ஒரு உறுதியான திட்டத்தை வரைய வேண்டும் என்று நான் பரிந்துரைக்கிறேன்.

 

புதிய மேம்பாட்டு வங்கியின் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு. மார்கோஸ் ட்ராய்ஜோவுக்கு நான் வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கொவிட் பெருந்தொற்று சூழலில் தேசிய வளர்ச்சி வங்கியின் (என்.டி.பி) நிதி ஆதரவு இன்னும் பயனுள்ளதாக இருக்கும். என்.டி.பி, ரஷ்யாவில் அலுவலகம் திறந்திருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அடுத்த ஆண்டு இந்தியாவிலும் உங்கள் பிராந்திய அலுவலகத்தைத் தொடங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

 

பிரிக்ஸ் இடை-வங்கி ஒத்துழைப்பு செயல்முறைக்காக பணியாற்றிய திரு. இகோர் ஷுவாலோவ்வை நான் வாழ்த்துகிறேன். 'பொறுப்புள்ள நிதியுதவிக்கான கோட்பாடுகளை'   நமது வளர்ச்சி வங்கிகள் ஒப்புக் கொண்டுள்ளன என்பது மகிழ்ச்சியளிக்கிறது.

 

பிரிக்ஸ் மகளிர் கூட்டணியைக் கூட்டுவது என்பது பிரதமர் புடினின் சிறப்பு முன்னுரிமையாக இருந்தது. அவருடைய எண்ணம் இப்போது நிறைவேறியுள்ளது.

 

அறிக்கை அளித்த, கூட்டணியின் தலைவர் திருமதி அண்ணா நெஸ்டெரோவாவுக்கு  நான் நன்றி கூறுகிறேன்.

 

இந்தியாவில் பெண்கள் தொழில்முனைவோரை மேம்படுத்த பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இந்தத் துறையில், கூட்டணியானது பிரிக்ஸ்-இடை ஒத்துழைப்பை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மீண்டும், உங்கள் அனைவருக்கும், குறிப்பாக எங்கள் புரவலர் திரு. புடினுக்கு அன்பான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 

குறிப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும். அசல் உரை இந்தியில்  நிகழ்த்தப்பட்டது.



(Release ID: 1676038) Visitor Counter : 172