மத்திய அமைச்சரவை

ப்ரிக்ஸ் நாடுகளுக்கு இடையே உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் : மத்திய அமைச்சரவை அனுமதி

Posted On: 25 NOV 2020 3:32PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய  அமைச்சரவைக் கூட்டத்தில், உடற்பயிற்சி, விளையாட்டுத் துறைகளில் ஒத்துழைப்பு குறித்து பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.

ஐந்து நாடுகளுக்கு இடையே விளையாட்டுத்துறையில் ஒத்துழைப்பு ஏற்படுவதன் மூலம் விளையாட்டு அறிவியல், விளையாட்டு மருத்துவம், பயிற்சி முறைகள் உள்ளிட்ட பிரிவுகளில் கூடுதல் அறிவு சார்ந்த தகவல்களைப் பெற முடியும். இதன் வாயிலாக  சர்வதேசப் போட்டிகளில் நமது விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்படுவதுடன், பிரிக்ஸ் நாடுகளுக்கிடையேயான உறவும் மேலும் வலுவடையும்.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் ஐந்து நாடுகளின் விளையாட்டு வீரர்களுக்கு கிடைக்கும் பலன்கள் சாதி, மத, இன பாகுபாடின்றி  அனைவருக்கும் சமமாக சென்றடையும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1675601

*******************


(Release ID: 1675664) Visitor Counter : 127