பிரதமர் அலுவலகம்

முதலீட்டுகளை ஈர்ப்பதற்கான ரீ-இன்வெஸ்ட் 2020-ஐ நவம்பர் 26 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

Posted On: 24 NOV 2020 6:13PM by PIB Chennai

மூன்றாவது சர்வதேச புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முதலீட்டு மாநாடு மற்றும் கண்காட்சியை (ரீ-இன்வெஸ்ட் 2020), 2020 நவம்பர் 26 அன்று மாலை 5.30 மணிக்கு காணொலி மூலம் பிரதமர் திரு நரேந்திர மோடி துவக்கி வைக்கிறார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தால் நடத்தப்படும் இந்த மாநாடு, 2020 நவம்பர் 26 முதல் 28 வரை நடக்கவிருக்கிறது.

ரீ-இன்வெஸ்ட் 2020- பற்றி

'நீடித்த எரிசக்தி மாற்றத்துக்கான புதுமைகள்' என்பது ரீ-இன்வெஸ்ட் 2020-இன் மையக்கருவாகும். புதுப்பிக்கத்தக்க மற்றும் எதிர்காலத்துக்கான எரிசக்தி வாய்ப்புகள் மற்றும் உற்பத்தியாளர்கள், உருவாக்குபவர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர்களுக்கான கண்காட்சி ஆகியவை இந்த மூன்று நாள் மாநாட்டின் முக்கிய அம்சங்களாகும்.

75-க்கும் அதிகமான சர்வதேச அமைச்சர் குழுக்கள், 1,000-க்கும் அதிகமான சர்வதேச தொழில்துறை தலைவர்கள், மற்றும் 50,000 பிரமுகர்கள் இதில் பங்கேற்கின்றனர். புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மேம்பாடு மற்றும் பயன்பாட்டை உலகளவில் அதிகரித்தல் மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களை இந்திய எரிசக்தித் துறையினருடன் இணைத்தல் ஆகியவை இதன் நோக்கங்களாகும்.

2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளில் நடந்த முதல் இரண்டு மாநாடுகளின் வெற்றியைத் தொடர்ந்து, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கான சர்வதேச தளத்தை வழங்குவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

 -----(Release ID: 1675470) Visitor Counter : 97