பிரதமர் அலுவலகம்
லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் நவம்பர் 25-ம் தேதி பங்கேற்பு
Posted On:
23 NOV 2020 1:04PM by PIB Chennai
லக்னோ பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு நிறுவன தின விழாவில், பிரதமர் திரு நரேந்திர மோடி, நவம்பர் 25-ம் தேதி மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் பங்கேற்கிறார். இந்த பல்கலைக்கழகம் கடந்த 1920-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, தற்போது 100-வது ஆண்டை கொண்டாடுகிறது.
இந்நிகழ்ச்சியில், லக்னோ பல்கலைக்கழகத்தின் 100-வது ஆண்டு நினைவு நாணயத்தை பிரதமர் வெளியிடுகிறார். மேலும், தபால் துறையின் சிறப்பு நினைவு அஞ்சல் தலை மற்றும் சிறப்பு உரையையும் பிரதமர் வெளியிடுகிறார்.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்பு அமைச்சர், உத்தரப் பிரதேச ஆளுநர் மற்றும் உத்தரப் பிரதேச முதல்வர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
******
(Release ID: 1675069)
Visitor Counter : 175
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam