பிரதமர் அலுவலகம்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை நவம்பர் 23-ஆம் தேதி பிரதமர் திறந்து வைக்கிறார்

Posted On: 21 NOV 2020 4:22PM by PIB Chennai

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்புகளை 2020 நவம்பர் 23 அன்று காலை 11 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார். மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லாவும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்.

புதுதில்லியில் உள்ள டாக்டர் பி டி மார்க் என்னும் இடத்தில் இந்த குடியிருப்புகள் அமைந்துள்ளன. 80 வருட பழமை வாய்ந்த 8 பங்களாக்கள் புதுப்பிக்கப்பட்டு 76 அடுக்குமாடிக் குடியிருப்புகளாக கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்பு கட்டுமானப் பணிக்காக ஒதுக்கப்பட்ட நிதியைவிட 14 சதவீதம் குறைவாகவே செலவாகியுள்ளது. கொவிட்-19 பெருந்தொற்றினால் பணிகள் பாதிப்பு ஏற்படாத வகையில் உரிய காலத்தில் இவை கட்டப்பட்டுள்ளன.

சாம்பல் மற்றும் கட்டுமானக் கழிவுகளிலிருந்து செய்யப்பட்ட செங்கற்கள், வெப்பத்தில் இருந்து காக்கும் மற்றும் எரிசக்தியை சேமிக்கும் சிறப்பு ஜன்னல்கள், எல்இடி விளக்குகள், குறைந்த எரிசக்தியில் இயங்கும் குளிர்சாதனப் பெட்டிகள், தண்ணீரை சேமிப்பதற்கான வசதிகள், மழைநீர் சேகரிப்பு மற்றும் கூரையில் சூரிய ஒளி சக்தி கருவி போன்றவை பொருத்தப்பட்ட பசுமைக் கட்டிடமாக இது விளங்கும்.

-----

 (Release ID: 1674722) Visitor Counter : 143