சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட் பரிசோதனைகளை அதிகரிக்கவும் : மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

Posted On: 20 NOV 2020 12:13PM by PIB Chennai

கண்டறியப்படாத மற்றும் விடுபட்ட கொரோனா நோயாளிகளைக் கண்டுபிடிக்க, கொவிட் பரிசோதனையை அதிகரிக்கும்படி மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

ஹரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர்  ஆகிய மாநிலங்களில் கொவிட் பாதிப்பு அதிகரித்ததையடுத்து அங்கு உயர்நிலை குழுக்களை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுக்கள், பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களுக்குச் சென்று தேவையான ஆலோசனைகளையும், வழிகாட்டுதல்களை வழங்கவுள்ளன. இதேபோல் கொவிட் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் உயர்நிலைக் குழுக்களை அனுப்புவது பற்றி மத்திய அரசு ஆலோசித்து வருகிறது.

கண்டறியப்படாத, விடுபட்ட  கொவிட் நோயாளிகளைக் கண்டறிய கொவிட்-19 பரிசோதனையை அதிகரிக்கும்படி, மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும், மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் இதுவரை 12,95,91,786 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட (10,83,397) பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளனஅதிகளவிலான பரிசோதனை, நோய் பாதிப்பு வீதம் குறைவதை உறுதி செய்துள்ளதுஇன்று ஒட்டு மொத்த பாதிப்பு விகிதம் 6.95 சதவீதமாக உள்ளது.

34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பரிந்துரைக்கப்பட்ட அளவான, ஒரு மில்லியன் பேருக்கு 140 பரிசோதனைகளை விட அதிகமாக மேற்கொள்கின்றன.

கடந்த 24 மணி நேரத்தில் 45,882 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளதுநாட்டில் தற்போது  4,43,794  பேர் கொவிட் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில், 44,807 பேர் குணடைந்துள்ளனர். இதனால் குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை  84,28,409 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் வீதம் இன்று  93.60%  சதவீதமாக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 584 பேர் உயிரிழந்துள்ளனர்இவர்களில் 81.85%  பேர், 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1674303

------


(Release ID: 1674349)