சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

புதிதாக கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவு

Posted On: 10 NOV 2020 11:19AM by PIB Chennai

ஆறு நாட்களுக்குப் பிறகு, இந்தியாவில் தினசரி கொவிட்-19  தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 40,000க்கும் குறைவாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 38,073 பேர் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மூன்றாவது நாளாக, அன்றாட புதிய தொற்று எண்ணிக்கை 50,000-க்கும் குறைவாக உள்ளது.

 

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை கடந்த சில வாரங்களாக குறைந்து காணப்படுகிறது.

தொடர்ந்து 38-வது நாளாக,  குமடைவோர் எண்ணிக்கை பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 42,033 பேர் குணமடைந்துள்ளனர்.

கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5,05,265 கக் குறைந்துள்ளது. இந்தியாவில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 5.88 சதவீதமாக உள்ளது. இது கொவிட் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை  குறைந்து கொண்டே வருகிறது என்பதைக் காட்டுகிறது.

கொவிட் தொற்றில் இருந்து குமடைவோர் சதவீதம்  92.64 ஆக அதிகரித்துள்ளது. இன்று வரை 79,59,406 பேர் குமடைந்துள்ளனர். கொவிட் தொற்றில் இருந்து குமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுவோர் இடையிலான இடைவெளி 74,54,141 ஆக விரிவடைந்துள்ளது.

கொவிட் தொற்றில் இருந்து குமடைந்தவர்களில் 78 சதவிதத்தினர் 10 மாநிலங்களையும், யூனியன் பிரதேசங்களையும் சேர்ந்தவர்கள்.

7,014 என்ற எண்ணிக்கையுடன் தில்லியில் அதிகப்படியான பேர் (ஒரு நாளில்) கொவிட் தொற்றில் இருந்து குமடைந்துள்ளனர். இதனை அடுத்து கேரளாவில் இருந்து 5,983 பேரும், மேற்கு வங்காளத்தில் இருந்து 4,396 நபர்களும் குமடைந்துள்ளனர்.

 

 

 

 

 

புதிதாக கொவிட் தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் 72 சதவிதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் தில்லியில் தான் அதிகமான பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். தில்லியில் 5,983 பேரும், அதனைத் தொடர்ந்து மேற்கு வங்காளத்தில் 3,907 பேரும், கேரளாவில் 3,593 பேரும், மகாராஷ்டிராவில் 3,277 பேரும் புதிதாக பாதிக்கபட்டுள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் கொவிட் தொற்றினால்448பேர் இறந்துள்ளனர். இதனை அடுத்து கொவிட் தொற்றினால் இந்தியாவில் இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து இரண்டாவது நாளாக 500க்கும் குறைவாக பதிவாகியுள்ளது.

இறந்தவர்களில் 78 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிராவில் தான் அதிகப்படியானோர் (85) இறந்திருக்கிறார்கள் என்றாலும் அம்மாநிலத்தின் தினசரி இறப்பு சதவீதம் 18.97 சதவீதமாக குறைந்துள்ளது. இதனை அடுத்து தில்லியில் 71 பேரும் மேற்கு வங்காளத்தில் 56 பேரும் இறந்துள்ளனர்.


(Release ID: 1671658) Visitor Counter : 206