சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 24 மணி நேரத்தில் 50 ஆயிரத்திற்கும் குறைவானவர்கள் மட்டுமே புதிதாக சிகிச்சை பெறுகின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2020 11:04AM by PIB Chennai

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்-19 நோய் தொற்றால், 50 ஆயிரத்திற்கும் குறைவாக 45,674 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்கடந்த அக்டோபர் 15-ஆம் தேதியிலிருந்து சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை  தொடர்ந்து குறைந்து வருகிறது.

புதிதாக சிகிச்சை பெறுபவர்களை விடவும்  குணமடைவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் 37-வது நாளாக இன்றும் இதே நிலை நீடிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் 49,082 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

தற்போது நாட்டில் 5,12,665 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது நாட்டின் மொத்த பாதிப்பில் 6.03 சதவீதமாகும்.

இதுவரை 78,68,968 பேர் நோயிலிருந்து குணம் அடைந்துள்ளனர். நாட்டில் குணம் அடைந்தோர் விகிதம் 92.49 சதவீதமாக பதிவாகியுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 559பேர் உயிரிழந்துள்ளனர்

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1671168

-----


(வெளியீட்டு அடையாள எண்: 1671239) வருகையாளர் எண்ணிக்கை : 203
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada