தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் தேசிய நிறுவனத்துடன் பிரசார் பாரதி புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted On: 04 NOV 2020 3:14PM by PIB Chennai

இந்திய பொது ஒளிபரப்புத் துறையான பிரசார் பாரதி, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் பாஸ்கராச்சாரியா விண்வெளி பயன்பாடுகள் மற்றும் புவி தகவலியல் தேசிய நிறுவனத்துடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இன்று கையெழுத்திட்டது.

இந்த ஒப்பந்தத்தின் வாயிலாகஸ்வயம்பிரபா (22 சேனல்கள்), 1 முதல் 12-ஆம் வகுப்புகளுக்கான தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவான என்சிஇஆர்டி-என் -வித்யா (12 சேனல்கள்), குஜராத் அரசின் வந்தே குஜராத் (16 சேனல்கள்) மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிஷாலா (1 சேனல்) ஆகியவை தூர்தர்ஷனின் இணை அடையாளமாக தூர்தர்ஷன் டிஷ் வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும்.

இதன்மூலம் ஊரக மற்றும் தொலைதூர பகுதியில் ஒவ்வொரு வீட்டுக்கும் தரமான கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் சென்றடையும். அனைவருக்கும் கல்வி வழங்கும் அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் இந்த முயற்சி அமையும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1670003

********

(Release ID: 1670003)




(Release ID: 1670262) Visitor Counter : 191