பாதுகாப்பு அமைச்சகம்
ஏரோ இந்தியா 2021 கண்காட்சிக்கான ஊடகப் பதிவு இன்று துவக்கம்
प्रविष्टि तिथि:
02 NOV 2020 2:45PM by PIB Chennai
பதிமூன்றாவது ஏரோ இந்தியா 2021, பெங்களூருவின் எலஹங்கா விமானப்படைத் தளத்தில் 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி முதல் ஏழாம் தேதி வரை நடைபெறும்.
இந்தக் கண்காட்சியில் பங்கேற்கும் ஊடகத் துறையினர் இன்று முதல் வரும் டிசம்பர் ஆறாம் தேதி வரை ஏரோ இந்தியா 2021 இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இந்தப் பதிவிற்குக் கட்டணம் எதுவும் இல்லை. எனினும் வெளிநாட்டு ஊடகத்துறையினர் 'ஜே விசா'வை கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
https://aeroindia.gov.in/media/mediaregcontent என்ற இணையதளத்தில் ஊடகத்துறையினர் தங்களது புகைப்படம் உள்ளிட்ட தகவல்களை அளித்து பதிவு செய்து கொள்ளலாம்.
மேக் இன் இந்தியா திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கத்தோடு இந்த ஏரோ இந்தியா கண்காட்சியில் சுமார் 500 இந்திய மற்றும் வெளிநாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் கலந்துகொள்ளும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1669441
-----
(रिलीज़ आईडी: 1669471)
आगंतुक पटल : 255
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Bengali
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Assamese
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam