ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்
2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65% வளர்ச்சியை எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் அடைந்துள்ளது
Posted On:
30 OCT 2020 11:27AM by PIB Chennai
மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் ரசாயனம் மற்றும் பெட்ரோகெமிக்கல்ஸ் துறையின் கீழ் செயல்படும் பொதுத்துறை நிறுவனமான எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் ஏற்றுமதியில் வளர்ச்சியை அடைந்துள்ளது.
2020 ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை கடந்த வருடத்தின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும் போது 65 சதவீத வளர்ச்சியை ஏற்றுமதிகளில் அடைந்துள்ளதாக எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட் தெரிவித்துள்ளது.
டைக்குளோரோ டைபெனில் டிரைக்ளோரோ ஈத்தேன் மற்றும் வேளாண் ரசாயனங்களை தென் ஆப்பிரிக்க நாடுகள், லத்தின் அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு மேற்கண்ட காலகட்டத்தில் ஏற்றுமதி செய்ததன் காரணமாக இந்த குறிப்பிடத்தக்க வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது.
எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட்டின் முயற்சிகளை பாராட்டிய மத்திய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சர் திரு சதானந்த கவுடா, "கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 2020-21 நிதி ஆண்டின் முதல் இரண்டு காலாண்டுகளில் 65 சதவீத வளர்ச்சியை அடைந்துள்ள எச் ஐ எல் (இந்தியா) லிமிடெட்டின் நிர்வாகம் மற்றும் குழுவினருக்கு வாழ்த்துகள். எதிர்வரும் வருடத்தில் இன்னும் வெற்றி பெற வாழ்த்துகிறேன்," என்றார்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668751
---
(Release ID: 1668903)
Visitor Counter : 199