மத்திய அமைச்சரவை

சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் இந்தியா, கம்போடியா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 OCT 2020 3:40PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் சுகாதாரம் மற்றும் மருந்துத் துறையில் இந்தியா, கம்போடியாவுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த இரு நாட்டு புரிந்துணர்வு ஒப்பந்தத்தினால் சுகாதாரத் துறையில் இந்தியா, கம்போடியா நாடுகளிடையேயான கூட்டு முயற்சிகள் மற்றும் தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு ஊக்கம் அளிக்கப்படும். இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இரு நாடுகளிடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்தும். இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நாளிலிருந்து 5 வருடம் வரை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் அமலில் இருக்கும்.

இரு நாடுகளின் அரசுகளுக்கு இடையே கீழ்காணும் முக்கிய துறைகளில் ஒத்துழைப்பு மேம்படுத்தப்படும்:

1. தாய் மற்றும் சேய் நலன்

2. குடும்பக் கட்டுப்பாடு

3. எச்ஐவி/ எய்ட்ஸ் மற்றும் காசநோய்

4. மருந்து மற்றும் மருந்து சார்ந்த பொருட்கள்

5. தொழில்நுட்ப பரிமாற்றம்

6. பொது சுகாதாரம் மற்றும் நோய் தொற்று

7. நோய் தடுப்பு (தொற்று மற்றும் தொற்று அல்லாதவை)

8. கம்போடியாவின் தேசிய நெறிமுறைக் குழு மற்றும் இந்திய சுகாதாரத் துறை/ அமைச்சகத்தின் ஒப்புதலோடு மருத்துவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

9. மருத்துவக் கல்வி

10. பொது சுகாதாரத் துறையில் மனித சக்தியை மேம்படுத்துதல்

11. மருத்துவ, துணை மருத்துவ மற்றும் மேலாண்மை திறன்களுக்கு பயிற்சி மற்றும்

12. இரு நாடுகளின் ஒத்துழைப்போடு இதர துறைகள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668393

**********************



(Release ID: 1668619) Visitor Counter : 189