மத்திய அமைச்சரவை

தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா, ஜப்பான் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 29 OCT 2020 3:41PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தகவல் தொழில் நுட்பத் துறையில் இந்தியா மற்றும் ஜப்பானுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பு மற்றும் புரிதல் வலுவடையும். மேலும், சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டுத் தகுதியை பெற்றுள்ள ஜப்பானுடனான இந்த ஒப்பந்தம் மூலோபாய திட்டமாக இந்தியாவுக்கு இது அமையும்.

5வது தலைமுறை வலையமைப்பு, தொலைத்தொடர்பு பாதுகாப்பு, நீர்மூழ்கிக் கப்பலின் கம்பிவடம், தொழில்நுட்ப சாதனங்களுக்கான தரச் சான்றிதழ், புதிய கம்பியில்லாத் தொழில் நுட்பம் மற்றும் தகவல் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்துதல், தகவல் தொழில்நுட்பத்தின் திறன் மேம்பாடு, பொதுப் பாதுகாப்பு மற்றும் பேரிடர் துயர் நீக்கம், செயற்கை நுண்ணறிவு, பிளாக் செயின், ஸ்பெக்ட்ரம் செயின், ஸ்பெக்ட்ரம் மேலாண்மை, பல தரப்பு முனையங்களில் ஒத்துழைப்பு உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.

மேலும் உலகளாவிய தர நிர்ணய செயல்முறைகளில் இந்தியாவுக்கு இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கூடுதல் வாய்ப்பளிக்கும். தகவல் தொழில்நுட்பத் துறையில் இரு நாடுகளின் ஒத்துழைப்பின் வாயிலாக இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு மேலும் வலுப்படுத்தப்படும். எதிர்காலத்துக்கு உகந்த நீர்மூழ்கிக் கப்பலின் கம்பிவட வலை அமைப்பை வடிவமைப்பதில் இரு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பினால் பிரதான இந்தியாவிலிருந்து தொலைதூர பகுதிகள் உடனான இணைப்பு மேம்படுத்தப்படும். தற்சார்பு இந்தியா கனவை நிறைவேற்றும் வகையில் ஸ்டார்ட்அப் சூழலுக்கு ஏற்ற வகையில் தகவல் தொழில்நுட்பத் துறையில் மனித கட்டமைப்பை ஊக்குவிப்பது இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668396

**********************


(Release ID: 1668616) Visitor Counter : 257