சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கடந்த 9 நாட்களில் 1 கோடி பரிசோதனைகளை இந்தியா செய்துள்ளது, ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன

Posted On: 29 OCT 2020 1:38PM by PIB Chennai

ஜனவரி 2020-இல் இருந்து கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்தியாவில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. பரிசோதனைகளுக்கான சுகாதார உள்கட்டமைப்பை வலுப்படுத்தியதின் காரணமாக இது சாத்தியமாகியுள்ளது.

இந்தியாவில் கடந்த 9 நாட்களில் மட்டும் 1 கோடி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த ஆறு வாரங்களில் தினமும் சுமார் 11 லட்சம் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தினமும் 15 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் அளவுக்கு இந்தியா தயாராக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 10,75,760 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ள நிலையில், இது வரை மொத்தம் 10.65 கோடிக்கும் அதிகமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. (10,65,63,440).

தொற்று உறுதிப்படுத்துதல் விகிதம் இன்று 7.54 சதவீதமாக குறைந்துள்ளது. தொடர் பரிசோதனைகள், கண்காணிப்பு மற்றும் சரியான நேரத்தில் சிகிச்சை ஆகியவற்றின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

 

இன்றைய நிலவரப்படி, தற்போதைய பாதிப்புகளின் எண்ணிக்கை 6,03,687 ஆக உள்ளது. மொத்த மதிப்புகளில் இது வெறும் 7.51 சதவீதம் ஆகும். இது வரை 73 லட்சத்துக்கும் அதிகமானோர் (73,15,989) குணமடைந்துள்ளனர்.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 56,480 பேர் குணமடைந்துள்ளனர். புதிய தொற்றுகளின் எண்ணிக்கை 49,881 ஆக உள்ளது. குணமடைந்தவர்களில் 79 சதவீதம் பேர் 10 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில் உள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1668359

******

(Release ID: 1668359)



(Release ID: 1668385) Visitor Counter : 167