பிரதமர் அலுவலகம்
பிரதமருடன் அமெரிக்க அமைச்சர்கள் சந்திப்பு
Posted On:
27 OCT 2020 5:29PM by PIB Chennai
அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் திரு மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை அமைச்சர் டாக்டர் மார்க் எஸ்பர் ஆகியோர், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினர்.
இந்த சந்திப்பின்போது, அமெரிக்க அதிபரின் வாழ்த்துகளை, அவர்கள் பிரதமரிடம் தெரிவித்தனர். அமெரிக்க அதிபருக்கும், பரஸ்பர வாழ்த்தை தெரிவித்த பிரதமர் திரு நரேந்திர மோடி, கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பயணம் வெற்றிகரமாக அமைந்ததையும் நினைவு கூர்ந்தார்.
இந்தியா-அமெரிக்கா இடையே இன்று நடந்த, 2 பிளஸ் 2 இருதரப்பு கூட்டம் ஆக்கப்பூர்வமாகவும், பயனுள்ளதாகவும் இருந்தது என பிரதமர் திரு. நரேந்திர மோடி யிடம், அமெரிக்க அமைச்சர்கள் தெரிவித்தனர். தொலைநோக்கு மற்றும் இலக்குகளை அடைய, இந்தியாவுடனான உறவை வலுப்படுத்துவதிலும், இணைந்து செய்லபடுவதிலும், அமெரிக்க அரசு தொடர்ந்து ஆர்வம் காட்டுவதாக அவர்கள் கூறினர்.
2 பிளஸ் 2 கூட்டம் வெற்றிகரமாக முடிந்ததை பிரதமர் பாராட்டினார். சமீப ஆண்டுகாலமாக இருதரப்பு உறவில் வளர்ச்சி மற்றும் சர்வதேச யுக்திகளில் இணைந்து செயல்படுவது திருப்தி அளிப்பதாகவும் கூறிய பிரதமர், இரு நாடுகள் இடையேயான மக்கள் உறவு மற்றும் நம்பிக்கை வலுவடைந்ததையும் சுட்டிக் காட்டினார்.
**********************
(Release ID: 1667921)
Visitor Counter : 212
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam