பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஜம்மு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவின் பெயர் சூட்டப்பட்ட புதிய கல்வி வளாகத்துக்கான அடிக்கல்லை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் நாட்டினார்

Posted On: 18 OCT 2020 8:44PM by PIB Chennai

மத்திய வட கிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சரும் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொதுமக்கள் குறைகள், ஓய்வூதியம், அணு சக்தி மற்றும் விண்வெளி இணை அமைச்சருமான டாக்டர் ஜிதேந்திர சிங், 
ஜம்மு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் பண்டிதர் மதன் மோகன் மாளவியாவின் பெயர் சூட்டப்பட்ட புதிய கல்வி வளாகத்துக்கான அடிக்கல்லை நாட்டினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், திரு மாளவியாவின்
பெயர் முதன்முறையாக சூட்டப்பட்ட கல்வி வளாகத்தை கொண்ட நாட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகங்களில் ஜம்மு மத்திய பல்கலைக்கழகமும் ஒன்று என்று தெரிவித்தார். 

இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் சிறந்து விளங்கிய கல்வியாளர்களில் பண்டதர் மதன் மோகன் மாளவியாவும், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியும் குறிப்பிடத் தகுந்தவர்கள் என்று கூறிய திரு சிங், ஆனால் உரிய அங்கீகாரம் அவர்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.

எனவே பண்டிதர் மாளவியாவுக்கு உரிய அஞ்சலியை செலுத்தும் வகையில் இந்த கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

சமீபத்தில் இதே பல்கலைக்கழகத்தில் உள்ள டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் பெயர் சூட்டப்பட்ட விடுதிக் கட்டிடம் ஒன்றை தான் திறந்து வைத்ததை குறிப்பிட்ட திரு சிங், கொல்கத்தாவுக்கு வெளியே அரசுப் பல்கலைக்கழகம் ஒன்றின் கட்டிடத்திற்கு அவரது பெயர் சூட்டப் படுவது இதுவே முதல் முறை என்றார்.


மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்:


https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1665709

******

(Release ID: 1665709)

 



(Release ID: 1665751) Visitor Counter : 126