சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

9 கோடி பரிசோதனைகளை தாண்டி புதிய உச்சத்தை எட்டியுள்ள இந்தியா, புதிய தொற்றுகளின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது

Posted On: 14 OCT 2020 11:50AM by PIB Chennai

ஜனவரி 2020 முதல் இன்று வரை இந்தியாவில் செய்யப்பட்டு வரும் கொவிட்-19 பரிசோதனைகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதில் புதிய உச்சமாக 9 கோடி பரிசோதனைகளை நாடு  இன்று கடந்தது.

கடந்த 24 மணி நேரத்தில் 11,45,015 பரிசோதனைகள் செய்யப்பட்ட நிலையில், இந்தியாவில் இது வரை செய்யப்பட்டுள்ள பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 9,00,90,122 ஆக உள்ளது.

மத்திய, மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் 1900-க்கும் அதிகமான ஆய்வகங்கள் நாட்டில் தற்போது செயல்படுகின்றன. 15 லட்சத்துக்கும் அதிகமான மாதிரிகள் தினமும் பரிசோதிக்கப்படுகின்றன.

பரிசோதனைகளின் எண்ணிக்கை நாடு முழுவதும் அதிகரித்துள்ள நிலையில், தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சிறப்பான முறையில் நோய்ப்  பரவல் கட்டுப்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பது இதன் மூலம் நிரூபணம் ஆகிறது.

 

தேசிய சராசரியை விட குறைவான அளவில் 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் புதிய தொற்றுகளின் எண்ணிக்கை உள்ளது. 8.04 சதவீதமாக உள்ள உறுதிப்பாடு விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது.

தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,26,876 ஆகும். நாட்டில் இது வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 11.42 சதவீதமாகும். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,632 நோயளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்தி குறிப்பை படிக்கவும்

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1664244

******

(Release ID: 1664244)



(Release ID: 1664268) Visitor Counter : 191