ஊரக வளர்ச்சி அமைச்சகம்
ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இது வரை 32 கோடி மனித சக்தி நாட்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு ரூ 31,500 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது
Posted On:
12 OCT 2020 4:44PM by PIB Chennai
கொவிட்-19 பெருந்தொற்றை தொடர்ந்து, கிராமங்களுக்கு திரும்பும் இடம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கும், ஊரகப் பகுதிகளில் உள்ள பாதிக்கப்பட்ட நபர்களுக்கும் வேலைவாய்ப்புகளையும், வாழ்வாதாரத்தையும் வழங்குவதற்காக ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டம் தொடங்கப்பட்டது.
ஆறு மாநிலங்களில் உள்ள 116 மாவட்டங்களில் இருக்கும் கிராமத்தினருக்கு வேலைவாய்ப்புகளை வழங்கி இந்த திட்டம் பெருமளவில் அவர்களுக்கு உதவி வருகிறது.
ஏழைகள் நல வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் இது வரை 32 கோடி மனித சக்தி நாட்களுக்கான வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு ரூ 31,500 கோடிக்கும் அதிகமாக செலவிடப்பட்டிருக்கிறது.
1,32,146 தண்ணீர் சேமிப்பு அமைப்புகள், 4,12,214 ஊரக வீடுகள், 35,520 மாட்டு கொட்டகைகள், 25,589 பண்ணை குட்டைகள் மற்றும் 16,253 சமுதாய சுகாதார வளாகங்கங்கள் கட்டப்பட்டுள்ளன.
மாவட்ட கனிம நிதியின் மூலம் 7,340 பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 2,123 கிராம பஞ்சாயத்துகளுக்கு இணைய இணைப்ப வழங்கப்பட்டுள்ளது. 21,595 கழிவு மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, 62,824 நபர்களுக்கு திறன் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1663714
**********************
(Release ID: 1663779)
Visitor Counter : 165
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Odia
,
Telugu
,
Malayalam